எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ரூ.12 லட்சம் வரை மானியம்: மத்திய அரசின் மெகா திட்டம்!!

By Saravana

எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்காக அதிகபட்சம் ரூ.12 லட்சம் வரை மானியம் வழங்குவதற்கு மத்திய அரசு இசைவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை குறைப்பதற்காக எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தேசிய அளவிலான தொலைநோக்கு திட்டத்தையும் அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

Mahindra Electric Vehicle

இந்த புதிய திட்டத்திற்கான வரைவுகளை மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் வகுத்து வருகிறது. இந்த நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானிய தொகைக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்புகளை மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகமும், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்தபட்சமாக ரூ.8,000 முதல் அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரையில் மானியம் வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 7.5 லட்சம் விலை கொண்ட ஹைபிரிட் கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் மானியம் வழங்கப்படும். ரூ.40,000க்கும் மேற்பட்ட விலை கொண்ட ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு ரூ.30,000 வரையில் மானியம் கிடைக்கும்.

இதேபோன்று, ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும், ஹைபிரிட் பஸ்களுக்கு ரூ.12 லட்சம் வரையிலும் மானியம் கிடைக்கும். மேலும், வாகனங்களின் விலையை அடிப்படையாக மட்டுமின்றி, அது பேட்டரியில் செல்லும் தூரத்தையும் கணக்கிட்டு வழங்கப்படும்.

இன்னும் ஒரு மாதத்தில் இதற்கான வரைவுகளை மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் தயாரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும், மத்திய அரசிடமிருந்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மானியத்தை நேரடியாக பெறும் வகையில் சிறப்பு சாஃப்ட்வேர் ஒன்றும் தயாரிக்கப்பட உள்ளது.

வாகன விற்பனைக்குரிய அத்தாட்சியை ஆன்லைனில் பதிவு செய்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மானியத்தை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்படும். இந்த புதிய மானிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டால், உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புதிய ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் வரிசை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The National Electric Mobility Mission Plan 2020 is expected to take off once the new government takes power at the Centre. The Ministry of Heavy Industries and the auto industry have reportedly agreed on the subsidy ceiling and the government is said to be planning on providing subsidies ranging from INR 8,000 to INR 12 lakh to hybrid and electric vehicles.
Story first published: Saturday, April 19, 2014, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X