புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஹூண்டாய் இயான் கார் அறிமுகம்

By Saravana

போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஹூண்டாய் இயான் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய காருக்கு ஹூண்டாய் டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் இயான் காரின் போட்டியாளர்களான மாருதி ஆல்ட்டோ காரின் கே10 மாடல் 1.0 லிட்டர் எஞ்சினுடனும், டட்சன் கோ கார் 1.2 லிட்டர் எஞ்சினுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால், இயான் கார் 0.8 லிட்டர் எஞ்சினுடன் கிடைக்கிறது. இது 56 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஆனால், போட்டி மாடல்கள் அதிக சக்தி கொண்டதாக கிடைக்கிறது.

இதனால், வாடிக்கையாளர்களின் தேர்வு பட்டியலில் இயான் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தநிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் புதிய 1.0 லிட்டர் எஞ்சினுடன் இயான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐ10 எஞ்சின்

ஐ10 எஞ்சின்

ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் ஐ10 காரில் இருக்கும் அதே 1.0 லிட்டர் எஞ்சின் தற்போது இயான் காரில் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்

பவர்

டட்சன் காரின் எஞ்சின் 67 பிஎச்பி பவர் கொண்டது. தற்போது வந்திருக்கும் புதிய இயான் காரின் எஞ்சின் 65 பிஎச்பி ஆற்றலையும், 95 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

ஒரே வேரியண்ட்

ஒரே வேரியண்ட்

புதிய 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட இயான் கார் மேக்னா வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். ஏசி, பவர் ஸ்டீயரிங், முன்புற பவர் விண்டோஸ், எஞ்சின் இம்மொபைலைசர், கீலெஸ் என்ட்ரி சிஸ்டம் ஆகிய வசதிகள் இருக்கும். ஆனால், ஆடியோ சிஸ்டம் இல்லை.

விலை

விலை

ரூ.3.85 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய 1.0 லிட்டர் இயான் கார் விற்பனைக்கு கிடைக்கும். தற்போது இந்த மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
As per earlier reports, Hyundai has indeed introduced a 1.0-litre engine in the Eon hatchback lineup. The small car was earlier available only with a 0.8-litre MPi engine, rated at 56 horsepower and 74 Nm of torque.
Story first published: Wednesday, April 23, 2014, 14:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X