புதிய 1.0 லி எஞ்சினுடன் வரும் ஹூண்டாய் இயான் ஃபேஸ்லிஃப்ட்!

By Saravana

போட்டியை சமாளிக்கும் விதத்தில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஹூண்டாய் இயான் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது.

தற்போது விற்பனையில் இருக்கும் இயான் காரில் 55 பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 0.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஐ10 காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை இயான் காரில் பொருத்த ஹூண்டாய் முடிவு செய்திருக்கிறது.

Hyundai Eon

ஐரோப்பிய மார்க்கெட் ஐ10 காரின் பெட்ரோல் எஞ்சின் 65 பிஎச்பி ஆற்றல் கொண்டது. இதைவிட இயான் காரின் 1.0 லிட்டர் எஞ்சின் பவர் சிறிது குறைவாக இருக்கும்.

மாருதி ஆல்ட்டோ கே10 மற்றும் டட்சன் கோ கார்கள் 67 பிஎச்பி ஆற்றல் கொண்டதாக இருக்கின்றன.

இந்த இரு கார்களால் இருக்கும் நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் புதிய பெட்ரோல் எஞ்சினுடன் இயான் காரை ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இதுதவிர, முகப்பில் சிறிய மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Hyundai Eon, the smallest, entry level hatchback offered by the Korean car maker is rumoured to receive a significant upgrade in the form of a 1.0-litre petrol engine. The Eon is currently powered by a 0.8-litre, three-cylinder engine rated at 55 bhp and 75 Nm of torque.
Story first published: Sunday, April 13, 2014, 15:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X