சிட்டி, சியாஸ் கார்களால் நெருக்கடி... விரைவில் வருகிறது வெர்னா ஃபேஸ்லிஃப்ட்!

By Saravana

ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் கார்களால் ஹூண்டாய் வெர்னா காரின் விற்பனை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் 5 மாதங்களில் 20,759 வெர்னா கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் அதே காலக்கட்டத்தில் 15,462 கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

அதேநேரத்தில், ஹோண்டா சிட்டி விற்பனை மும்மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் 9,855 சிட்டி கார்களால் விற்பனையாகியிருந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் அதே காலக்கட்டத்தில் 30,447 சிட்டி கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. போதாத குறைக்கு மாருதி சியாஸ் காருக்கு இதுவரை 13,000 முன்பதிவு கிடைத்துள்ளது. இதனால், வரும் வெர்னா விற்பனையில் சரிவு ஏற்படும் என்று தெரிகிறது. இதையடுத்து, வெர்னா காருக்கு புதுப்பொலிவு கொடுத்து களமிறக்குகிறது.


அறிமுகம்!

அறிமுகம்!

ரஷ்யாவில் சோலரிஸ் என்ற பெயரில் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

 முகப்பு மாற்றம்

முகப்பு மாற்றம்

பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. அதேவேளை, முகப்பு டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். புளுயிடிக் 2.0 டிசைன் அடிப்படையில் வெர்னா முகப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. அதேவேளை, முகப்பு டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். புளுயிடிக் 2.0 டிசைன் அடிப்படையில் வெர்னா முகப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. அதேவேளை, முகப்பு டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். புளுயிடிக் 2.0 டிசைன் அடிப்படையில் வெர்னா முகப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

புரொஜெக்டர் ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய பனி விளக்குகள், புதிய பம்பர் மற்றும் கிரில் என முன்புறம் புளுயிடிக் டிசைனில் செதுக்கப்பட்டு கவர்கிறது. எல்இடி விளக்குகளுடன் பிரேக் லைட்டுகள், புதிய ரிஃப்லெக்டர், தாழ்வான பம்பர் ஆகியவை வெர்னாவின் பின்புறத்தை மிக அழகாக காட்டுகிறது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷனும் மேம்படுத்தப்பட்டிருப்பதால் இன்னும் சிறப்பான கையாளுமையை வழங்கும்.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது. தற்போதைய எஞ்சின் ஆப்ஷன்களில் தொடர்ந்து விற்பனைக்கு வரும்.

இந்தியாவில் விற்பனைக்கு...

இந்தியாவில் விற்பனைக்கு...

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
South Korean automaker Hyundai, is all set to give the Verna a midlife facelift owing to the strong competition from the Japanese carmaker Honda and Indian car maker Maruti.
Story first published: Tuesday, October 21, 2014, 10:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X