புதிய எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்!

By Saravana

புதிய காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.

Hyundai SUV

எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடான், புதிய எலைட் ஐ20 கார்களை அறிமுகம் செய்த அந்த நிறுவனம் தொடர்ந்து புதிய செக்மென்ட்டுகளில் கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில்," இந்த ஆண்டிலிருந்து இதுவரை இடம்பெறாத புதிய செக்மென்ட்டுகளில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய துவங்கியுள்ளோம்.

வரும் ஆண்டுகளிலும் இதுபோன்று புதிய செக்மென்ட்டுகளில் கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளோம். அதிக வரவேற்பு இருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் எம்பிவி மார்க்கெட்டுகளிலும் புதிய மாடல்களுடன் களமிறக்க உள்ளோம்," என்று கூறினார்.

அடுத்த ஆண்டு முதலாவதாக புதிய காம்பேக்ட் எஸ்யூவியை ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதைத்தொடர்ந்து, புதிய எம்பிவி மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர் போன்ற எஸ்யூவி மாடல்களுக்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி நேரடி போட்டியாக இருக்கும். இதேபோன்று, மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ கார்களுக்கு ஹூண்டாயின் புதிய எம்பிவி மாடல் போட்டியை தரும்.

Most Read Articles
English summary
Rakesh Srivastava HMIL Vice President Sales and Marketing told source, "From this year we have started entering segment where we are not present. We will continue to do this in the coming years to enter segments where we are not present currently." He also said that Hyundai India will soon enter the compact SUV and MPV segment. 
Story first published: Friday, August 22, 2014, 8:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X