பீஜிங் மோட்டார்ஷோவில் புதிய ஹூண்டாய் காம்பெக்ட் எஸ்யூவி அறிமுகம்!

By Saravana

சீனத் தலைநகர் பீஜங்கில் நடந்து வரும் சர்வதேச வாகன கண்காட்சியில், ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐஎக்ஸ்25 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய எஸ்யூவி ரெனோ டஸ்ட்டர் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களுடன் போட்டிபோடும்.

 வடிவம்

வடிவம்

இது ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகியவற்றிற்கு இடையிலான நீள, அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எஸ்யூவி 4,270 மிமீ நீளம், 1,780 மிமீ அகலமும், 1,630 மிமீ உயரமும் கொண்டது. இது 2,590 மிமீ வீல் பேஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியில் 2.0லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது இரண்டுவிதமான பவர் கொண்டதாக ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது. ஒன்று 148 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாகவும், மற்றொரு மாடல் 164 பிஎச்பி அதிகபட்ச பவர் கொண்டதாகவும் வருகிறது.

இந்தியாவுக்கு சூட் ஆகுமா?

இந்தியாவுக்கு சூட் ஆகுமா?

வடிவம், எஞ்சின் போன்ற அம்சங்கள் இந்திய மார்க்கெட் விதிமுறைகளுக்கு உகந்ததாக தெரியவில்லை. எனவே, இந்தியாவில் 4 மீட்டருக்குள் சுருக்கப்பட்ட மாடலாக இந்த புதிய மாடலை ஹூண்டாய் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, இந்தியாவில் வேறு எஞ்சின் கொண்டதாக வரலாம்.

விற்பனை

விற்பனை

நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சீனாவில் விற்பனைக்கு செல்கிறது. இந்திய மதிப்பில் ரூ.13.55 லட்சம் விலையில் அங்கு விற்பனைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, உலக அளவில் பல்வேறு மார்க்கெட்டுகளிலும் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

Source

Most Read Articles
Story first published: Monday, April 21, 2014, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X