சான்ட்ரோவுக்கு மாற்றாக ஐ10 காரை டாக்சி மார்க்கெட்டில் களமிறக்கும் ஹூண்டாய்!

By Saravana

சான்ட்ரோ காருக்கு மாற்றாக ஐ10 காரை டாக்சி மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

டாக்சி மார்க்கெட்டில் சான்ட்ரோ காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்தநிலையில், சான்ட்ரோ கார் உற்பத்தி இந்த மாதத்துடன் நிறுத்தப்பட உள்ளது. இதையடுத்து, டாக்சி மார்க்கெட்டில் சான்ட்ரோ காருக்கு மாற்றாக ஐ10 காரை நிலைநிறுத்த ஹூண்டாய் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

Hyundai i10

மும்பையில் முதலில் ஐ10 டாக்சி கார்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து, பெஙகளூர், டெல்லி, கோல்கட்டா ஆகிய நகரங்களிலும் ஐ10 டாக்சி மாடலை அறிமுகம் செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தயாரிப்பு நிலை ஐ10 காரில் சிஎன்ஜி கிட் பொருத்தப்படுவதில்லை. எனவே, டாக்சி மார்க்கெட்டுக்கு பேஸ் மாடல் ஐ10 காரில் சிஎன்ஜி கிட் பொருத்தி தர இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்த பேஸ் மாடலில் பவர் ஸ்டீயரிங் மற்றும் ஏசி இருக்காது.

ஏற்கனவே 25,000 சான்ட்ரோ கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முன்பதிவு செய்த டாக்சி ஓட்டுனர்கள் மற்றும் டாக்சி ஆபரேட்டர்களுக்கு ஐ10 டாக்சி மாடலை மாற்றாக தேர்வு செய்து கொள்ள வாய்ப்பை தர இருப்பதாகவும் ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Motor, the South Korean carmaker is looking to introduce the i10 to the taxi market in Mumbai. The company is looking to introduce the hatchback to the black and yellow taxi market in Mumbai first, followed by Delhi, Bangalore and Kolkata in the following weeks.
Story first published: Thursday, December 18, 2014, 10:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X