புதிய ஹூண்டாய் ஐ20 காரின் ஸ்கெட்சுகள் வெளியீடு: முன்பதிவு இன்று துவக்கம்

By Saravana

அதிக ஆவலை ஏற்படுத்தியிருக்கும் புதிய ஹூண்டாய் ஐ20 காரின் ஸ்கெட்ச்சுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்த புதிய ஹூண்டாய் ஐ20 கார் எலைட் ஐ20 என்ற பெயரில் அழைக்கப்படும்.

டிசைன் மாற்றங்கள், கூடுதல் வசதிகளுடன் வரும் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு இன்று முதல் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, விரைவில் விற்பனைக்கு வருவதும் உறுதியாகியுள்ளது.


ஐரோப்பிய டிசைன்

ஐரோப்பிய டிசைன்

ஜெர்மனியிலுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் ஐரோப்பிய டிசைன் மையத்தில் இந்த புதிய கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது புளுயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஸ்கெட்ச்சுகள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முன்பதிவு

முன்பதிவு

ரூ.50,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என டீலர்களில் தெரிவிக்கப்படுகிறது. வரும் 11ந் தேதி இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

ஹெட்லைட்டை இணைக்கும் விதத்திலான கிரில், அறுகோண வடிவ ஏர்டேம், அகன்ற ஹெட்லைட் ஹவுசிங், எல்இடி டெயில்லைட்டுகள் போன்றவை புதிய எலைட் ஐ20 காரை வேறுபடுத்துவதோடு, கவர்ச்சியையும் கூட்டுகிறது. குறிப்பாக, பின்புற டெயில்லைட்டுகள் மிக மிக கவர்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

முந்தைய ஐ-ஜென் ஐ20 காரில் இருந்தது போன்றே பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களிலும் தேர்வு செய்து கொள்ளலாம். இதேபோன்று, எரா, அஸ்ட்டா, மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் என முந்தைய வேரியண்ட் பெயர்களிலேயே விற்பனைக்கு கிடைக்கும்.

போட்டி

போட்டி

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மாடல்களான ஃபியட் புன்ட்டோ எவோ, மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட், டாடா போல்ட் மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்களுடன் நேரடியாக போட்டி போடும்.

Most Read Articles
English summary
South Korean car maker Hyundai has officially revealed the New i20 car ahead of its launch on August 11, 2014, while also commencing bookings for the hatchback from today.
Story first published: Friday, August 1, 2014, 12:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X