புதிய ஹூண்டாய் காம்பெக்ட் செடான் அறிமுகமானது - படங்களுடன், விபரங்கள்

டாடா ஸெஸ்ட், ஃபோர்டு காம்பெக்ட் செடான் கான்செப்ட் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு புதிய காம்பெக்ட் செடான் இன்று மார்க்கெட்டிற்கு அறிமுகமாகியுள்ளது.

4 மீட்டருக்குள் நீளம் கொண்ட புத்தம் புதிய காம்பெக்ட் செடான் காரை டெல்லியில் நடந்த விழாவில் சற்றுமுன் அறிமுகப்படுத்தியது ஹூண்டாய். இந்த காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

 எக்ஸ்சென்ட்

எக்ஸ்சென்ட்

விற்பனை நிறுத்தப்பட்ட ஆக்சென்ட் காருக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படும் இந்த புதிய காருக்கு எக்ஸ்சென்ட் என்று பெயரிட்டுள்ளது ஹூண்டாய்.

டிசைன்

டிசைன்

கடந்த ஆண்டு செப்டம்பரில் விற்பனைக்கு வந்த ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் காரின் செடான் மாடலாக இது வந்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

கிராண்ட் ஐ10 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர் கப்பா2 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின்களுடன் வந்துள்ளது எக்ஸ்சென்ட் செடான்.

 டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வந்துள்ளது. இதுதவிர, பெட்ரோல் மாடலில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மாடலிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

 கூல்டு கிளவ் பாக்ஸ்

கூல்டு கிளவ் பாக்ஸ்

கிராண்ட் ஐ10 போன்றே இந்த காரிலும் கூல்டு கிளவ் பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பூட் ரூம்

பூட் ரூம்

இந்த செக்மென்ட்டிலேயே அதிக பூட் ரூம் கொள்ளளவு கொண்டதாக குறிப்பிடப்படுகிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

அஸ்டா வேரியண்ட்டில் ஏபிஎஸ், டியூவல் ஏர்பேக்ஸ், ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளன.

 வசதி

வசதி

பின்புற இருக்கை பயணிகளுக்கு வசதியாக ஹெட்ரெஸ்ட் மற்றும் கப் ஹோல்டர்களுடன் கூடிய ரியர் ஆர்ம் ரெஸ்ட்டுடன் வந்துள்ளது.

 புஷ்பட்டன் ஸ்டார்ட்

புஷ்பட்டன் ஸ்டார்ட்

கதவை எளிதாக திறப்பதற்கும், காரை ஸ்டார்ட் செய்வதற்கும் ஏதுவாக ஸ்மார்ட் கீ சிஸ்டம் கொண்டுள்ளது.

கன்ட்ரோல் சுவிட்சுகள்

கன்ட்ரோல் சுவிட்சுகள்

ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மியூசிக் சிஸ்டத்தை எளிதாக இயக்க முடியும்.

 ரியர் ஏசி

ரியர் ஏசி

இந்த காரின் பின்புற பயணிகளுக்காக தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

15 இஞ்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

2 டின் ஆடியோ சிஸ்டம் உள்ளது. மேலும், இது ஒரு ஜிபி தகவல் சேமிப்பு வசதி கொண்டது. சிடி பிளேயர், யுஎஸ்பி போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

பீயேஜ் மற்றும் கருப்பு நிற டியூவல் டோன் இன்டிரியர், சிறப்பான டிசைன் ஆகியவை இன்டிரியரை அலங்கரிக்கின்றன.

 இருக்கைகள்

இருக்கைகள்

மிக சொகுசான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

விற்பனை

விற்பனை

அடுத்த மாதம் முதல் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் செடான் விற்பனைக்கு வர இருக்கிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களின் விற்பனையில் நிச்சயம் இந்த புதிய ஹூண்டாய் காம்பெக்ட் செடான் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X