ஹூண்டாய் வெர்னாவின் புதிய பேஸ் வேரியண்ட்டுகள் அறிமுகம்!

By Saravana

ஹூண்டாய் வெர்னா காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா சிட்டியின் வருகையால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்கும் விதத்தில் இந்த புதிய பேஸ் மாடல்களை ஹூண்டாய் களமிறக்கியுள்ளது. கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் காத்திருக்கின்றன.

 மாற்று வேரியண்ட்

மாற்று வேரியண்ட்

ஜிஎல் என்ற பெயரில் புதிய பேஸ் வேரியண்ட் கிடைக்கும். இதுவரை விற்பனையில் இருந்து வந்த இஎக்ஸ் என்ற பேஸ் வேரியண்ட்டுக்கு பதிலாக இந்த புதிய ஜிஎல் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வசதிகள் குறைப்பு

வசதிகள் குறைப்பு

இந்த புதிய வேரியண்ட்டில் பல்வேறு வசதிகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, கீ லெஸ் என்ட்ரி மற்றும் 2 டின் ஆடியோ சிஸ்டம் போன்ற ஆக்சஸெரீஸ்கள் இடம்பெற்றிருக்கும்.

விலை

விலை

பெட்ரோல் மாடலில் வந்திருக்கும் புதிய ஜிஎல் பேஸ் வேரியண்ட் ரூ.7.17 லட்சம் விலையிலும், டீசல் மாடல் வந்திருக்கும் புதிய ஜிஎல் பேஸ் வேரியண்ட் ரூ.8.35 லட்சம் விலையிலும் கிடைக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

ஹூண்டாய் வெர்னாவின் புதிய ஜிஎல் பேஸ் வேரியண்ட்டுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். இந்த காரில் 105 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 89 பிஎச்பி ஆற்றலையும், 224 என்எம் அதிகபட்ச டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கின்றன. 6 ஸ்பீடு கியர் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

விற்பனை நிறுத்தம்

விற்பனை நிறுத்தம்

புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில், வெர்னாவின் சில வேரியண்ட்டுகளை விற்பனையில் இருந்து ஹூண்டாய் விலக்கிக் கொண்டுள்ளுத. 1.6 எஸ்எக்ஸ்(ஓ) ஆட்டோமேட்டிக் மாடலும், 1.6 லிட்டர் பெட்ரோல் மாடலின் இஎக்ஸ் வேரியண்ட் மற்றும் 1.6 லிட்டர் டீசல் மாடலின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளும் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Hyundai recently launched their new sedan the Xcent. They now have secretly launched a GL variant of their Verna both in petrol and diesel options.
Story first published: Saturday, March 22, 2014, 17:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X