மீண்டும் இந்தியா வரும் ஹோண்டா அக்கார்டு... எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா?

By Saravana

காம்பேக்ட் சொகுசு கார்கள் மற்றும் போட்டியாளர்களின் நெருக்கடியால் ஹோண்டா அக்கார்டு பிரிமியம் செடான் கார் இந்தியாவில் மார்க்கெட்டை இழந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஹோண்டா அக்கார்டு காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. மேலும், காரின் மெகா சைஸும் வாடிக்கையாளர்களை கவரவில்லை.

இந்த நிலையில், வடிவமைப்பில் பல மாறுதல்களுடன் புதிய தலைமுறை ஹோண்டா அக்கார்டு கார் இந்திய மண்ணில் தடம் பதிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புதிய ஹோண்டா அக்கார்டு காரில் எதிர்பார்க்கப்படும் சில முக்கிய மாற்றங்கள், சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


நீளம் குறைவு

நீளம் குறைவு

விற்பனை நிறுத்தப்பட்ட மாடலைவிட புதிய அக்கார்டு காரின் நீளம் குறைவாக இருக்கும். வீல் பேஸ் குறைவாக இருக்கும் என்பதால் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும். அதேவேளை, கேபினுக்குள் முந்தைய மாடலின் அளவுக்கு பயணிகளுக்கான இடவசதி இருக்கும்.

 புதிய சேஸீ

புதிய சேஸீ

உறுதிமிக்க புதிய சேஸீயை புதிய அக்கார்டு காரில் பொருத்தப்பட்டிருக்கும். தவிர, புதிய எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்கும் அக்கார்டு காருக்கு வலு சேர்க்கும்.

 பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

புதிய அக்கார்டு காரின் பெட்ரோல் மாடலில் முந்தைய மாடலில் இருந்த அதே 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 177 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

டீசல் மாடலிலும்...

டீசல் மாடலிலும்...

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினை அக்கார்டு காரிலும் பொருத்தி அறிமுகம் செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது. ஆனால், முதலில் பெட்ரோல் மாடலையும், பின்னர் டீசல் மாடலையும் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டிருக்கிறது.

 எப்போது வருகிறது?

எப்போது வருகிறது?

அடுத்த ஆண்டு இறுதியில் புதிய ஹோண்டா அக்கார்டு கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டொயோட்டா கேம்ரி, ஸ்கோடா சூப்பர்ப் கார்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

டீசல் நம்பிக்கை

டீசல் நம்பிக்கை

அமேஸ், சிட்டி கார்களின் டீசல் மாடல்கள் பெரும் வெற்றியை ருசித்து வருகின்றன. இதைத்தொடர்ந்து, அக்கார்டு காரின் டீசல் மாடலையும் மிகுந்த நம்பிக்கையுடன் ஹோண்டா களமிறக்க உள்ளது. ஆனால், இந்த செக்மென்ட்டில் டீசல் மாடலுக்கு எந்தளவு வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

இதனிடையே, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்டிருந்த ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட் மாடல் இந்த ஆண்டு இறுதியில் வருவதாக ஒரு தகவல் இருந்து வருகிறது. ஆனால், இந்த தகவலை ஹோண்டா கார் நிறுவனம் இன்னும் ஊர்ஜிதம் செய்யவில்லை.

Most Read Articles
English summary
The all-new Honda Accord is said to make a re-entry into India by 2015. What can we expect? We take a closer look at the 2015 Honda Accord offerings. 
Story first published: Tuesday, July 1, 2014, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X