ஹூண்டாய் ஐஎக்ஸ்25 காம்பேக்ட் எஸ்யூவியில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா?

By Saravana

புதிய ஹூண்டாய் ஐஎக்ஸ்25 காம்பேக்ட் எஸ்யூவி சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. ரூ.11.95 லட்சம் இந்திய மதிப்பில் அங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அடுத்ததாக இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் ஐஎக்ஸ்25 காம்பேக்ட் எஸ்யூவியை இந்திய மண்ணில் வைத்து சோதனைகள் நடத்தி வருவதால், இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி வருவது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ஹூண்டாய் ஐஎக்ஸ்25 எஸ்யூவியில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்பது குறித்த தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.


புதிய ஹூண்டாய் ஐஎக்ஸ்25 சிறப்பம்சங்கள்

புதிய ஹூண்டாய் ஐஎக்ஸ்25 சிறப்பம்சங்கள்

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஹூண்டாய் ஐஎக்ஸ்25 எஸ்யூவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்பது குறித்த தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

டிசைன்

டிசைன்

ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் 2.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்ட்டுள்ளது. கண்ணை கவரும் தோற்றம் கொண்டிருக்கும் இந்த புதிய காம்பேக்ட எஸ்யூவி 'பேபி' சான்டா ஃபீ மாடலாக குறிப்பிடப்படுகிறது. முகப்பு தோற்றம் சான்டா ஃபீ போன்றே இருப்பதுதான் அவ்வாறு அழைப்பதற்கு காரணம். எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் குறிப்பிடும்படியாக இருக்கும்.

வடிவம்

வடிவம்

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி 4,270மிமீ நீளமும், 1,780மிமீ அகலமும், 1,630மிமீ உயரமும் கொண்டதாகவும், 2,590மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 மீட்டருக்கு குறைவாக சுருக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த மாற்றங்களும் இருக்காது என்றும் ரெனோ டஸ்ட்டர் போன்றே 4 மீட்டருக்கும் அதிகமான மாடலாக நிலைநிறுத்த ஹூண்டாய் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

ஹூண்டாய் நிறுவனத்தின் பிற கார் மாடல்களில் இருக்கும் இன்டிரியர் அம்சங்கள் கலவையாக காணப்படுகிறது. ஸ்டீயரிங் வீல் வெர்னாவை போலவும், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் டிசைன் எலைட் ஐ20 கார் போலவும், சென்டர் கன்சோல் மற்றும் ஏசி வென்ட்டுகள் சான்டா ஃபீ எஸ்யூவியை நினைவூட்டுவதாகவும் இருக்கிறது. இந்த காரில் ஹூண்டாய் புளூலிங்க் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

சீனாவில் 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் வந்துள்ளது. ஆனால், இந்தியாவில் வெர்னா காரில் செயலாற்றி வரும் 106 பிஎச்பி பவரையும் 135 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 126 பிஎச்பி பவரையும், 260என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வரும் என்று தெரிகிறது.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

அடுத்த ஆண்டு இந்தியா வரும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி ரூ.7.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai ix25 is scheduled to be launched in India in 2015. Hyundai ix25 will compete with the likes of Renault Duster, Nissan Terrano and Mahindra XUV500,
Story first published: Monday, October 20, 2014, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X