கடந்த நிதி ஆண்டின் விற்பனையில் டாப்- 5 கார் மாடல்கள் விபரம்

By Saravana

கடந்த இரு ஆண்டுகளாகவே கார் மார்க்கெட் படு மந்தமாக இருந்து வருகிறது. பல்வேறு பிரச்னைகளால் இடிபட்டு வரும் கார் மார்க்கெட்டில், அனைத்து சவால்களையும் கடந்து சில கார் மாடல்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2013- 14 நிதி ஆண்டில் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 5 கார் மாடல்களின் பட்டியலை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம். கடந்த நிதி ஆண்டின் டாப்- 5 பட்டியலில் மாருதியின் ஆதிக்கம் பலமாக இருந்தது. புதிய கார் மாடல்கள் வந்தும், மாருதி கோட்டையை எந்த மாடலும் தகர்க்க முடியவில்லை. இதோ டாப்- 5 பட்டியல்...

நம்பர்- 1

நம்பர்- 1

கடந்த நிதி ஆண்டில் ஆல்ட்டோ 800 கார் நம்பர்- 1 கார் மாடல் என்ற டைட்டிலை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் 2.58 லட்சம் ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன.

நம்பர்- 2

நம்பர்- 2

கடந்த நிதி ஆண்டில் டாப்-5 பட்டியலில் இரண்டாவது இடத்தை ஸ்விஃப்ட் கார் பெற்றுள்ளது. மொத்தம் 1.98 லட்சம் ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகின.

மூன்றாம் இடத்தில்...

மூன்றாம் இடத்தில்...

வழக்கம்போல் மூன்றாம் இடம் டிசையருக்கு. கடந்த நிதி ஆண்டில் 1.97 லட்சம் டிசையர் செடான் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

4ஆம் இடத்தில்...

4ஆம் இடத்தில்...

கடந்த நிதி ஆண்டின் டாப்- 5 பட்டியலில் வேகன் ஆர் காரும் இடம்பிடித்தது. 1.56 லட்சம் விற்பனையுடன் பட்டியலில் 4ம் இடத்தை பெற்றது.

டாப்- 5 பட்டியலில் கடைசி...

டாப்- 5 பட்டியலில் கடைசி...

கடந்த நிதி ஆண்டில் டாப்- 5 பட்டியலில் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியும் இடம் பிடித்தது. கடந்த நிதி ஆண்டில் 1.07 லட்சம் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டன. 6வது இடத்தை ஹூண்டாய் இயான் பெற்றது.

இடம் பிடிக்க தவறிய புதிய மாடல்கள்

இடம் பிடிக்க தவறிய புதிய மாடல்கள்

கடந்த ஆண்டு அறிமுகமான கார் மாடல்களில் ஹோண்டா அமேஸ் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஆகிய கார்கள் விற்பனை பட்டியலில் முறையே 7வது மற்றும் 8வது இடத்தை பிடித்தன. கடந்த நிதி ஆண்டில் 77,000 அமேஸ் கார்களும், 72,000 கிராண்ட் ஐ10 கார்களும் விற்பனையாகியுள்ளன.

ஈக்கோஸ்போர்ட்

ஈக்கோஸ்போர்ட்

முன்பதிவில் பல வரலாறுகளை பதிவு செய்த ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மற்றும் டஸ்ட்டர் ஆகியவை 50,000க்கும் குறைவான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.

Most Read Articles
Story first published: Saturday, April 19, 2014, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X