அதிக மைலேஜ் தரும் டாப்-15 கார்கள்... ஹோண்டா முன்னிலை... மாருதி ம்ஹூம்!!

அதிக மைலேஜ் தரும் டாப்-15 கார்களின் பட்டியலில் ஒரு மாருதி கார் கூட இடம்பெறவில்லை. அதேசமயம், ஹோண்டா கார்கள் முன்னிலை பெற்று அசத்தியிருக்கின்றன.

இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிக முன்னுரிமை தருகின்றனர். கார் விற்பனையில் மைலேஜ் அளவும் முக்கிய காரணியாக இருக்கிறது. இந்த நிலையில், அதிக மைலேஜ் தரும் டாப்-15 கார்களில் ஹோண்டா, டாடா, ஹூண்டாய் மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகல் முன்னிலை வகிக்கின்றன. செவர்லே பீட் காரும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.


கார்களின் மைலேஜ் மற்றும் கூடுதல் விபரம்

கார்களின் மைலேஜ் மற்றும் கூடுதல் விபரம்

அதிக மைலேஜ் தரும் கார்களை பற்றி படிக்கும்போதே அதன் விலை, வசதிகள் உள்ளிட்ட பிற அம்சங்களையும் தெரிந்துகொள்ள ஆவல் ஏற்படுவது சகஜம்தான். அதற்காக, அந்த காரின் மைலேஜ் விபரங்களுடன், முழுமையான தகவல்களை தெரிந்துகொள்வதற்கான இணைப்பையும் தந்துள்ளோம். டாப்-15 கார்களின் பட்டியலை தொடர்ந்து காணலாம்.

ஹோண்டா சிட்டி டீசல்

ஹோண்டா சிட்டி டீசல்

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் ஹோண்டா சிட்டி காரின் டீசல் மாடல் முதலிடத்தை பெற்றுள்ளது. லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று தெரிவிக்கிறது.

இந்த காரை பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஹோண்டா அமேஸ் டீசல்

ஹோண்டா அமேஸ் டீசல்

இரண்டாவது இடத்தில் ஹோண்டா அமேஸ் டீசல் கார் பெற்றுள்ளது. இது லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று தெரிவிக்கிறது.

இந்த காரை பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

செவர்லே பீட்

செவர்லே பீட்

செவர்லே பீட் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று கூறுகிறது.

இந்த காரை பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 டாடா இண்டிகோ இசிஎஸ்

டாடா இண்டிகோ இசிஎஸ்

டாடா இண்டிகோ இசிஎஸ் டீசல் கார் லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த காரை பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

டாடா நானோ பிஎஸ்-4

டாடா நானோ பிஎஸ்-4

டாடா நானோ பிஎஸ்-4 மாடல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25.4 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரை பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 டாடா இண்டிகோ எக்ஸ்எல்

டாடா இண்டிகோ எக்ஸ்எல்

டாடா இண்டிகோ எக்ஸ்எல் டீசல் மாடல் லிட்டருக்கு 25.2 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா இண்டிகா இவி2

டாடா இண்டிகா இவி2

டாடா இண்டிகா இவி2 டீசல் கார் லிட்டருக்கு 25.2 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த காரை பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

டாடா நானோ பிஎஸ்-3

டாடா நானோ பிஎஸ்-3

டாடா நானோ பிஎஸ்3 மாடல் லிட்டர் பெட்ரோலுக்கு 25.2 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் காரான எக்ஸ்சென்ட் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 24.4 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.

இந்த காரை பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த காரை பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ்

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ்

டொயோட்டா எட்டியோஸ் டீசல் கார் லிட்டருக்கு 23.6 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த காரை பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

டொயோட்டா எட்டியோஸ் செடான்

டொயோட்டா எட்டியோஸ் செடான்

டொயோட்டா எட்டியோஸ் செடான் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 23.6 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த காரை பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 டொயோட்டா லிவா

டொயோட்டா லிவா

டொயோட்டா லிவா ஹேட்ச்பேக் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 23.6 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று கூறுகிறது.

இந்த காரை பற்றிய முழு விபரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

 டாடா இண்டிகோ எக்ஸ்எல் டைகோர்

டாடா இண்டிகோ எக்ஸ்எல் டைகோர்

டாடா இண்டிகோ எக்ஸ்எல் டைகோர் டீசல் கார் லிட்டருக்கு 23.6 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாருதியின் விளக்கம்

மாருதியின் விளக்கம்

இலகு எடை, டிரான்ஸ்மிஷனில் மேம்பாடு உள்ளிட்ட மாறுதல்களின் மூலம் மிகுந்த எரிபொருள் சிக்கனம் தரும் மாடல்களை உருவாக்கி அறிமுகம் செய்து வருவதாக மாருதி தெரிவித்துள்ளது. இருப்பினும், நாட்டின் அதிகம் கார் விற்பனை செய்யும் மாருதியின் ஒரு கார் மாடல் கூட இந்த பட்டியலில் இடம்பெறாதது வாடிக்கையாளர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Source: ET

Most Read Articles
English summary
Maruti cars have been knocked off the list of most fuel efficient cars in India, according to a report published by ET. After several years of the Alto being the car that delivered the most mileage (more than a decade), it has been overthrown by sedans from the stables of Honda, the City and the Amaze.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X