இந்தியாவுக்காக புதிய எம்பிவி காரை தயாரிக்கும் இசூஸு!

By Saravana

இந்திய மார்க்கெட்டுக்காக புத்தம் புதிய எம்பிவி காரை வடிவமைத்து வருவதாக ஜப்பானிய நிறுவனமான இசூஸு தெரிவித்துள்ளது. தற்போது எம்யூ-7 என்ற பிரிமியம் எஸ்யூவி மாடலையும், டி- மேக்ஸ் என்ற பிக்கப் டிரக் மாடலையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, புதிய 7 சீட்டர் எம்பிவி காரை இசூஸு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய எம்பிவி கார் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

இசூஸு ஆர்யு30 என்ற பெயரில் இந்த புதிய எம்பிவி கார் தயாரிக்கப்பட்டு வருகிறது.

 உற்பத்தி

உற்பத்தி

சென்னையிலுள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் எம்யூ-7 எஸ்யூவி அசெம்பிள் செய்யப்படுகிறது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம், ஸ்ரீசிட்டியில் ரூ.3,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு வரும் இசூஸுவின் புதிய ஆலையில் இந்த எம்பிவி கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

 விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

2016ம் ஆண்டு அக்டோபரில் இந்த புதிய எம்பிவி காரின் உற்பத்தியை துவங்க இசூஸு திட்டமிட்டுள்ளது. மேலும், 2016ம் ஆண்டின் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் முடிவு செய்துள்ளது.

 விற்பனை இலக்கு

விற்பனை இலக்கு

ஆண்டுக்கு 40,000 எம்பிவி கார்களை விற்பனை செய்ய இசூஸு திட்டமிட்டுள்ளது. தவிர, பிற நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் திட்டமும் இசூஸுவிடம் உள்ளது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய டொயோட்டா இன்னோவா மற்றும் அமெரிக்க டிசைன் மையத்தில் வடிவமைக்கப்பட்டு வரும் புதிய மஹிந்திரா ஸைலோ எம்பிவி கார்களுடன் போட்டி போடும்.

 குறிப்பு

குறிப்பு

மாதிரிக்காக இசூஸு பாந்தர் எம்பிவி காரின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதே இசூஸு பாந்தர் எம்பிவி கார் இந்தியாவில் செவர்லே தவேரா பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #isuzu #four wheeler #இசூஸு
English summary
Japanese automaker Isuzu Motors is planning to launch a new seven-seater MPV car to compete against Toyota Innova within two years time. 
Story first published: Tuesday, September 2, 2014, 10:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X