செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது புதிய லம்போ ஹூராகென் சூப்பர் கார்!

By Saravana

வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் புதிய லம்போர்கினி ஹூராகென் சூப்பர் காரின் டெலிவிரி துவங்கப்பட உள்ளது. அதிக விற்பனையான லம்போர்கினி கார் என்ற பெருமையை பெற்ற கல்லார்டோ சூப்பர் காரின் மாற்றாக வந்த இந்த புதிய மாடலுக்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

உலக அளவில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை ஹூராகென் பெற்றிருக்கிறது. அதில், இந்தியாவிலிருந்து சிலரும் முன்பதிவு செய்துள்ளனர் என்று லம்போர்கினியின் இந்திய செயல்பாட்டு பிரிவு தலைவர் பவன் ஷெட்டி தெரிவித்தார்.

நடப்பு காலாண்டில் ரூ.3.4 கோடி விலையில் இந்த புதிய லம்போ சூப்பர் கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் லம்போர்கினி நிறுவனத்தின் வர்த்தக நிலவரம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


இந்தியாவின் பங்கு

இந்தியாவின் பங்கு

உலக அளவில் லம்போர்கினி நிறுவனத்தின் விற்பனையில் இந்தியாவின் பங்கு வெறும் ஒரு சதவீதம்தான். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் லம்போர்கினியின் டாப்-10 விற்பனை நாடுகளில் இந்தியாவுக்கும் இடம் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது.

விற்பனை எண்ணிக்கை

விற்பனை எண்ணிக்கை

கடந்த ஆண்டு 22 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது லம்போர்கினி. இது சிறிய எண்ணிக்கைதான் என்றாலும், அது அந்த நிறுவனத்திற்கு 29 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்று தந்துள்ளது.

இந்தியாவுக்கு ஸ்பெஷல் இடம்

இந்தியாவுக்கு ஸ்பெஷல் இடம்

குறிப்பிட்ட நாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்காக புதிய ஹூராகென் காரை லம்போர்கினி அனுப்பி வைத்தது. அதில், இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர் வட்டம்

வாடிக்கையாளர் வட்டம்

இந்தியாவில் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர் வட்டத்தை லம்போர்கினி கொண்டுள்ளது.

தொழிலதிபர்கள்

தொழிலதிபர்கள்

இந்தியாவில் லம்போர்கினி காரை வாங்கியவர்களில் பெரும்பான்மையானோர் தொழிலதிபர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது ஷோரூம்

மூன்றாவது ஷோரூம்

டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் தற்போது லம்போர்கினி ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடப்பு காலாண்டில் பெங்களூரில் மூன்றாவது ஷோரூமை திறக்க லம்போர்கினி திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Expected to be priced upwards of INR 3.4 crores in the country, the Huracan will be launched in India in the early second half of the year, reports BS. Deliveries are then set to begin by September.
Story first published: Wednesday, May 14, 2014, 12:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X