ஸ்லோவாகியா தயாரிப்பு மாடலாக வரும் லம்போர்கினி உரஸ் எஸ்யூவி!

By Saravana

இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி கார் நிறுவனத்தின் உரஸ் என்ற முதல் எஸ்யூவி கான்செப்ட் பல்வேறு மோட்டார் ஷோக்களில் தரிசனம் தந்துவிட்டது.

இந்த எஸ்யூவியை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்லும் பணிகளில் லம்போர்கினி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 2017ம் ஆண்டில் இந்த புதிய சூப்பர் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், உரஸ் எஸ்யூவி இத்தாலியில் உற்பத்தி செய்யப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது வாடிக்கையாளர் மத்தியில் சிறிது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

தயாரிப்பு ஆலை

தயாரிப்பு ஆலை

ஸ்லோவாகியா நாட்டின் பிராட்டிஸ்லாவாவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலையில்தான் இந்த புதிய எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட உள்ளதாம். இங்கு ஆடி க்ய7 மற்றும் ஃபோக்ஸ்வேகன் டூரக் எஸ்யூவி மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இத்தாலி தயாரிப்புகள் தரம் மிக்கதாக இருக்கும் என்பது வாடிக்கையாளர்களிடம் பரவலாக இருக்கும் நம்பிக்கை. ஆனால், இந்த தகவல் உரஸ் எஸ்யூவியை எதிர்பார்த்து காத்திருக்கும் கோடீஸ்வரர்கள் மத்தியில் சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்லோவாகியாவில் தயாரிக்கப்படுவதால் தரம் குறைவாக இருக்கும் என்பது அர்த்தமில்லை. ஆனால், வாடிக்கையாளர்களின் எண்ணம் அவ்வாறாக உள்ளது.

 ஆஸ்தான ஆலை

ஆஸ்தான ஆலை

வழக்கமாக லம்போர்கினி கார்கள் சான்ட் அகதாவில் உள்ள ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படும். தற்போது இங்கு அவென்டேடார் சூப்பர் காரும், விரைவில் விற்பனைக்கு வரும் ஹூராகென் காருக்கும் தயாரிக்கப்படுகின்றன.

லம்போர்கினி கணக்கு

லம்போர்கினி கணக்கு

ரஷ்யா, மத்திய கிழக்கு மற்றும் சீன மார்க்கெட்டுகளை குறிவைத்து இந்த புதிய எஸ்யூவி மாடலை விற்பனைக்கு விடுவதற்கான திட்டங்களை லம்போர்கினி வகுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Lamborghini has showcased their concept SUV the Urus many times at various Motor Shows. Finally they have confirmed they will be manufacturing this uber-luxurious SUV. The Italian iconic manufacturer suggests their SUV should be ready for 2017.
Story first published: Saturday, April 26, 2014, 13:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X