பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் முதல் எஸ்யூவியை அறிமுகப்படுத்திய லேண்ட்ரோவர்

By Saravana

ஆஃப்ரோடு மற்றும் சொகுசு அம்சங்களை முன்னிறுத்தி தனது எஸ்யூவி மாடல்களை லேண்ட்ரோவர் அறிமுகம் செய்வது வழக்கம். ஆனால், இந்த முறை அதிவேக அம்சங்களை முன்னிறுத்தி ஓர் புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

2015 ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்களின் எதிர்கால உயர் பெர்ஃபார்மென்ஸ் மாடல்களின் பெயரில் எஸ்விஆர் என்ற பேட்ஜ் கொடுக்கப்பட உள்ளது. அதில், முதலாவதாக வந்திருக்கும் மாடல் இதுவாகும். பெபுள் பீச் வாகன திருவிழாவில் முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது.


புதிய பிராண்டு

புதிய பிராண்டு

பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி பிராண்டு போன்றே இனி தனது பெர்ஃபார்மென்ஸ் கார் மாடல்களில் ஸ்பெஷல் ரேஸிங் வெகிக்கிள் என்பதன் சுருக்கமான எஸ்விஆர் என்ற பெயரை ஒட்ட வைக்க இருக்கிறது ஜாகுவார் லேண்ட்ரோவர்.

சோதனை

சோதனை

இந்த புதிய மாடல் நர்பர்க்ரிங் டிராக்கில் வைத்து சோதனை செய்தபோது ஒரு சுற்றை 8 நிமிடங்கள் 14 வினாடிகளில் நிறைவு செய்துள்ளது. இந்த சக்திவாய்ந்த லேண்ட்ரோவர் மாடலின் கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

 சக்திவாய்ந்த எஞ்சின்

சக்திவாய்ந்த எஞ்சின்

இதுவரை வந்த ரேஞ்ச்ரோவர் எஸ்யூவிகளில் சக்திவாய்ந்ததாக குறிப்பிடப்படுகிறது. இந்த புதிய மாடலில் 550 எச்பி பவரை அளிக்கும் 5.0 லிட்டர் வி8 சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. சாதாரண மாடலைவிட இதன் பவர் 40எச்பி வரையிலும், டார்க் 56 என்எம் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 மைலேஜில் சமரசம் இல்லை

மைலேஜில் சமரசம் இல்லை

பவர் அதிகரிக்கப்பட்டபோதிலும், இந்த மாடலின் மைலேஜ் எவ்விதத்திலும் குறைவிருக்காது என லேண்ட்ரோவர் தெரிவிக்கிறது. நகர்ப்புறத்தில் ஒரு கேலனுக்கு 22.5 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் ஒரு கேலனுக்கு 30.57 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்படுகிறது.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் மாடல் நர்பர்க்ரிங் டிராக்கில் செய்யப்பட்ட சோதனையில் 0- 96 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளிலும், அதிகபட்சமாக மணிக்கு 260 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்டதாகவும் லேண்ட்ரோவர் குறிப்பிடுகிறது. நர்பர்க்ரிங் டிராக்கில் அதிவேகத்தை தொட்ட தயாரிப்பு நிலை மாடலாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

ஆஃப்ரோடு அம்சங்கள்

ஆஃப்ரோடு அம்சங்கள்

இதில் ஆஃப்ரோடு அம்சங்களும் உள்ளன. தேவைப்படும்போது 100 சதவீத டார்க்கையும் முன் அல்லது பின்புற சக்கரங்களுக்கு அனுப்பும் தொழில்நுட்பம் உள்ளது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

வளைவுகளில் கார் கவிழ்வதை தவிர்க்கும் ஆக்டிவ் ரோல் கன்ட்ரோல், சாலைகளுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படும் அடாப்டிவ் டேம்பர்களுடன் கூடிய ஏர் சஸ்பென்ஷன், புதிய முகப்பு மற்றும் பின்புற டிசைன் ஆகியவை வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களாக இருக்கும்.

இழுவை திறன்

இழுவை திறன்

இந்த புதிய மாடல் 3 டன் எடையை இழுக்கும் திறன் கொண்டது.

 அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

அனைத்து சாலைநிலைகளிலும் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் வழங்கும் விதத்திலான பிரத்யேக டயர்கள் மற்றும் 22 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விலை

விலை

இந்த புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் மாடல் 93,450 பவுண்ட் விலையில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வருகிறது.

 டெலிவிரி

டெலிவிரி

வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் மாடலுக்கு இங்கிலாந்தில் முன்பதிவு துவங்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் டெலிவிரி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Jagauar Landrover has unveiled of its fastest, most powerful Rangerover Sport SVR suv. The first model to wear the SVR designation being adopted by future Land Rover and Jaguar high-performance models.
Story first published: Monday, August 11, 2014, 18:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X