ரூ.5,000 கோடியை முதலீடு செய்யும் மஹிந்திரா!!

By Saravana

புதிய மாடல்கள் தயாரிப்பு மற்றும் வாகன உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்காக, அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.5,000 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட மாடல்களை தவிர்த்து புதிதாக 8 முதல் 10 புதிய மாடல்களை வடிவமைக்கும் பணிகளுக்கு இந்த முதலீடு பயன்படுத்திக் கொள்ளப்படும்.

Mahindra SUV

இதுதவிர, மஹாராஷ்டிராவின் இகத்புரி, நாசிக், சகன் மற்றும் கண்டிவாலி ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் இந்த முதலீடு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதுதவிர, புதிய இடங்களில் ஆலை அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.

பயணிகள் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகன துறைகளில் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், அதற்கு இந்த முதலீடு இன்றியமையாதது என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

Most Read Articles
Story first published: Saturday, February 15, 2014, 10:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X