2,300 எக்ஸ்யூவி 500 மற்றும் ஸைலோ கார்களுக்கு மஹிந்திரா ரீகால்!

எஞ்சினில் குறைபாடுடைய பாகத்தை மாற்றித் தருவதற்காக, மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் ஸைலோ கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

கடந்த மேமாதம் தயாரிக்கப்பட்ட எக்ஸ்யூவி 500 மற்றும் ஸைலோ கார்களின் எஞ்சினின் வாக்கம் பம்ப்பில் பிரச்னை இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கார்களில் இருக்கும் குறைபாடுடைய வாக்கம் பம்ப்பை மாற்றித் தர மஹிந்திரா முடிவு செய்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடலில் W4, W6 மற்றும் W8 வேரியண்ட்டுகளும், ஸைலோவின் Vlx,Sle மற்றும் Lx வேரியண்ட்டுகளின் எஞ்சின் வாக்கம் பம்ப்பில் பிரச்னை இருப்பதாக தெரியவந்துள்ளது.

தள்ளுபடியுன் மெட்ஸிலர் ரோட்டெக் ட்யூப்லெஸ் டயர்கள்!

மேலும், ஸைலோ காரின் H9, H9 மற்றும் H4 ஆகிய வேரியண்ட்டுகளிலும் இந்த பிரச்னை இருப்பதாக கருதப்படுகிறது. மொத்தம் 2,300 வாகனங்களில் இந்த பிரச்னை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Mahindra and Mahindra has recalled 2,300 units of different variants of its popular sports utility vehicles (SUVs) Scorpio and XUV500, and multi purpose vehicle Xylo to rectify a defective vacuum pump in engines manufactured in May this year. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X