உதிரிபாகத்தில் குறைபாடு: ஸ்கார்ப்பியோவை திரும்ப அழைக்கும் மஹிந்திரா

By Saravana

குறைபாடு உள்ளதாக கருதப்படும் உதிரிபாகத்தை மாற்றித் தருவதற்காக ஸ்கார்ப்பியோ எஸ்யூவியை திரும்ப அழைத்துள்ளது மஹிந்திரா.

குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளின் பிரஷர் வால்வில் பிரச்னை இருப்பதை மஹிந்திரா பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Mahindra Scorpio

இதையடுத்து, கடந்த 2012ம் ஆண்டு மே முதல் கடந்த ஆண்டு நவம்பர் வரை தயாரிக்கப்பட்ட ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் இஎக்ஸ் வேரியண்ட்டுக்கு மஹிந்திரா திரும்ப அழைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிற வேரியண்ட்டுகளில் பாதிப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது. மொத்தம் 23,519 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளில் பாதிப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாத வரையிலான காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்கார்ப்பியோவின் இஎக்ஸ் வேரியண்ட்டுகளை அழைத்து பிரச்னையை சரிசெய்து கொடுத்துவிட்டது மஹிந்திரா.

மீதமுள்ள ஸ்கார்ப்பியோ இஎக்ஸ் வேரியண்ட் எஸ்யூவிகளை மட்டும் திரும்ப அழைத்து பிரச்னை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய உள்ளது.

திரும்ப அழைக்கப்படும் ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளின் பிரஷர் வால்வில் குறைபாடு இருந்தால் இலவசமாக அந்த பாகத்தை மாற்றித் தரப்படும். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Mahindra & Mahindra will be recalling its popular SUV the Scorpio in India. The recall will affect 23,519 vehicles as there is an issue with the pressure valves. Only the EX trim of Scorpio has the issue and is being recalled.
Story first published: Wednesday, July 9, 2014, 9:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X