மஹிந்திரா ரேவா இ2ஓ காரின் விலை ரூ.1.7 லட்சம் குறைப்பு... ஆனால்..?!

By Saravana

ரூ.7 லட்சம் நெருக்கத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும், மஹிந்திரா ரேவா இ2ஓ காரை ரூ.4.99 லட்சம் விலையில் வாங்கிக் கொள்ளும் வகையில் புதிய திட்டத்தை மஹிந்திரா ரேவா அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பேட்டரிக்கு விலை நிர்ணயிக்காமல், அதனை 5 ஆண்டுகளுக்கு மாத வாடைக்குக்கு எடுத்துக் கொள்ளும் வகையில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, குயிக்2சார்ஜ் என்ற புதிய வசதியுடன் கூடிய மஹிந்திரா ரேவா இ2ஓ காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மஹிந்திரா ரேவா இ2ஓ காரின் பேட்டரிக்கான மாதாந்திர வாடகை திட்டம் மற்றும் 15 நிமிடத்தில் சார்ஜ் செய்யும் வசதி பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பேட்டரி வாடகை திட்டம்

பேட்டரி வாடகை திட்டம்

காரின் விலையை தவிர்த்து, பேஸ் வேரியண்ட்டுக்கு மாதம் ரூ.2,599ம், டாப் வேரியண்ட்டுக்கு ரூ.2,999ம் பேட்டரிக்கான மாத வாடகையாக வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.

நிபந்தனைகள்

நிபந்தனைகள்

இந்த சமயத்தில் 50,000 கிலோமீட்டர் தூரத்துக்கு வாடிக்கையாளர்கள் பேட்டரியை வாடகை செலுத்தி பயன்படுத்திக் கொள்ள முடியும். பேட்டரியில் ஏற்படும் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகளை மஹிந்திரா ரேவா நிறுவனமே பொறுப்பேற்றுக் கொள்வதோடு, பேட்டரி பழுது ஏற்பட்டால், உடனடியாக சரிசெய்து தரும் விதத்தில், 24 மணி நேர அவசர சாலை உதவித் திட்டத்தையும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

குயிக்2 சார்ஜ் வசதி

குயிக்2 சார்ஜ் வசதி

மஹிந்திரா ரேவா இ2ஓ காரில் வெறும் ஒரு மணி நேரத்தில் முழு சார்ஜ் செய்து கொள்ளும் குயிக்2சார்ஜ் என்ற புதிய வசதியுடன் கிடைக்கிறது. இதன்மூலம், அதிவிரைவான சார்ஜ் ஏற்றும் வசதியை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

15 நிமிடத்தில் சார்ஜ்

15 நிமிடத்தில் சார்ஜ்

வெறும் 15 நிமிடத்தில் 25 கிமீ தூரம் செல்வதற்கான பேட்டரி சார்ஜ் செய்ய முடியும். தவிர, ஒரு மணி நேரத்தில் முழு சார்ஜ் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் சார்ஜ் நிலையங்கள்

எக்ஸ்பிரஸ் சார்ஜ் நிலையங்கள்

பெங்களூரில் 15 முதல் 20 இடங்களில் அதிவிரைவு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை திறக்க இருப்பதாக மஹிந்திரா ரேவா தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் காணலாம்.

டாப் வேரியண்ட்டில் மட்டும்

டாப் வேரியண்ட்டில் மட்டும்

மஹிந்திரா இ2ஓ காரின் டாப் வேரியண்ட்டில் மட்டும் இந்த புதிய வசதி கிடைக்கும். இதற்காக, சாதாரண சார்ஜ் ஏற்றும் போர்ட்டுடன், நம்பர் பிளேட் அருகில் கூடுதல் சார்ஜ் ஏற்றும் ஸ்மார்ட் போர்ட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு மின்சாரம்

வீட்டுக்கு மின்சாரம்

இந்த ஸ்மார்ட் போர்ட் மூலம் காரின் பேட்டரியை சார்ஜ் செய்வதோடு மட்டுமின்றி, பேட்டரியிலிருந்து வீட்டுக்கும் மின்சார சப்ளையையும் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விலை

விலை

ரூ.6,79,793 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பேஸ் வேரியண்ட் ரூ.4.99 லட்சத்திலும், ரூ.7,13,527க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பிரிமியம் வேரியண்ட் ரூ.5.55 லட்சம் விலையிலும், குயிக்2சார்ஜ் வசதி கொண்ட பிரிமியம் வேரியண்ட் ரூ.5.99 லட்சத்திலும் இனி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏற்றுமதி

ஏற்றுமதி

தற்போது நேபாளத்திற்கு மட்டும் இ2ஓ கார் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், வரும் அக்டபோர் அல்லது நவம்பர் முதல் இங்கிலாந்துக்கும் ஏற்றுமதி துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
Mahindra Reva e2o has just become a lot more affordable. India's only mainstream electric car, which previously cost nearly INR 7 lakhs at the very least, can now be yours for as low as INR 4.99 lakhs (On-road Delhi) for the base variant.
Story first published: Tuesday, February 18, 2014, 17:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X