இனி ஆர்டரின் பேரில் ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் மாடல்!

By Saravana

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்ப்பியோ. ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற புத்தம் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல்கள் வந்த பிறகும் மார்க்கெட்டில் தனக்கென நிலையான இடத்தை தக்க வைத்து வருகிறது ஸ்கார்ப்பியோ.

ரூ.7.82 லட்சம் முதல் ரூ. 12.75 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிகம் விற்பனையாகும் மாடல் என்றாலும் ஸ்கார்ப்பியோவின் அனைத்து வேரியண்ட்டுகளும் சிறப்பாக விற்பனையாகின்றன என்று சொல்ல முடியாது.

Mahindra Scorpio

ஏனெனில், இதன் டாப் வேரியண்ட்டுகள் எக்ஸ்யூவி500வைவிட விலை அதிகம் இருப்பதால், வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், டாப் வேரியண்ட்டுகளில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் போனியாகவில்லை.

இதையடுத்து, ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு ஆர்டர் செய்தால் மட்டுமே டெலிவிரி கொடுக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது. 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டதாக ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் மாடல் கிடைக்கிறது. 120 பிஎச்பி பவர் கொண்ட 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Mahindra Scorpio, the SUV maker's most popular model, is outdated in a world of new SUVs and compact SUVs like the EcoSport, Duster and Terrano. Nevertheless, it continues to be the best selling SUV in India
Story first published: Tuesday, May 13, 2014, 8:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X