அல்ஜீரிய தேச மக்களை அசத்திய மஹிந்திரா எஸ்யூவிகள்!

By Saravana

அல்ஜீரிய நாட்டு மார்க்கெட்டில் இரண்டு மாடல்களுடன் மஹிந்திரா நிறுவனம் கால் பதிக்கிறது. அந்த நாட்டில் குவான்ட்டோ மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய இரு எஸ்யூவி மாடல்களையும் மஹிந்திரா விரைவில் விற்பனைக்கு விட உள்ளது.

கடந்த மாதம் 3ந் தேதி முதல் 6ந் தேதி வரை நடந்த அல்ஜீரிய சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் குவான்ட்டோ மற்றும் எக்ஸ்யூவி500 மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அப்போது, இரு மாடல்களும் அல்ஜீரிய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துவிட்டதாம்.

Mahindra XUV500

இதையடுத்து, அல்ஜீரியாவுக்கு விரைவில் இரு மாடல்களின் ஏற்றுமதியையும் துவங்க மஹிந்திரா முடிவு செய்துவிட்டது. எக்ஸ்யூவி500 மாடலில் எந்தவொரு மாற்றங்களும் இல்லாமல் அல்ஜீரியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆனால், குவான்ட்டோவில் அதிக மாற்றங்களை செய்து அங்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. ஆம், அந்த நாட்டுக்கு செல்லும் குவான்ட்டோவில் 120 எச்பி ஆற்றலை அளிக்கும் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர, அல்ஜீரிய மார்க்கெட்டுக்கு தகுந்தாற்போல் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary

 Mahindra the Indian automobile giant has decided to export its cars to Algerian markets. They will first introduce two models in Algeria the Quanto and XUV500.
Story first published: Wednesday, April 2, 2014, 18:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X