கார் விலையை உயர்த்த டாடா, மஹிந்திரா திட்டம்!

By Saravana

வரும் 1ந் தேதி முதல் கார் விலையை உயர்த்துவதற்கு டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனத்தை சமாளிக்கும் விதத்தில் இந்த விலை உயர்வு முடிவை விரைவில் அறிவிக்க உள்ளன.

உற்பத்தி செலவீனத்தை சமாளிப்பதற்காக கார் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மஹிந்திரா தலைமை நிர்வாகி பிரவீன் ஷா கூறினார்.

இதேபோன்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கார் விலையை 2 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் கார்கள் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டதையடுத்து, கார்கள் விலையை பல நிறுவனங்கள் சமீபத்தில் குறைத்தன. இந்த நிலையில், கார் விலை உயர்த்தப் போவதாக முன்னணி நிறுவனங்கள் கூறியிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Only yesterday we learn't that Honda Cars India would increase prices of its vehicles from April 1st. Would that be an April fool's day joke because only a few weeks back most car and two wheeler manufacturers reduced prices, following drop in auto taxes.
Story first published: Wednesday, March 26, 2014, 11:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X