விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 500!

ஒரு லட்சத்தை கடந்து விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது மஹிந்திரா எக்ஸ்யூவி 500. கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

டிசைன், எஞ்சின், வசதிகள், விலை ஆகியவை வாடிக்கையாளர்கள் மத்தியில் சபாஷ் போட வைத்தது. இதனால், குறுகிய காலத்தில் மிகப்பெரிய முன்பதிவு எண்ணிக்கையும் பெற்று அசத்தியது. இதற்கு வலுசேர்க்கும் விதத்தில் ஏராளமான விருதுகளையும் பெற்றது. இந்திய மார்க்கெட் மட்டுமின்றி தென் ஆப்ரிக்க, ஐரோப்பா, சிலி, பெரு, பராகுவே, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில், விற்பனையில் ஒரு லட்சம் என்ற புதிய மைல்கல்லை மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எட்டியுள்ளது. ரெனோ டஸ்ட்டர், நிசான் டெரானோ போன்ற போட்டி மாடல்களின் நெருக்கடியை சமாளித்து மிகச்சிறப்பான விற்பனை பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது.


 கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500வின் சிறப்பம்சங்களை காணலாம்.

மோனோகாக் சேஸீ

மோனோகாக் சேஸீ

மோனோகாக் சேஸீ அமைப்பில் வடிவமைக்கப்பட்ட மஹிந்திராவின் முதல் மாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இலகு எடை, அதிக உறுதி கொண்ட ஒரே கட்டமைப்பிலான நவநாகரீக வடிவமைப்பை கொடுக்கக்கூடிய சேஸீ இதுவாகும்.

 எஞ்சின்

எஞ்சின்

ஸ்கார்ப்பியோவில் பொருத்தப்பட்டிருக்கும் 2,179சிசி திறன் கொண்ட 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின்தான் புதிய எக்ஸ்யூவி 500 விலும் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ட்யூனிங்கில் புதிய எக்ஸ்யூவி 500 எஞ்சின் வேறுபடுகிறது. இந்த எஞ்சின் 3,750 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் அதிகபட்சம் 140 பிஎச்பி ஆற்றலையும், 1,600 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் அதிகபட்சம் 330 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

 வெளிப்புற வடிவமைப்பு:

வெளிப்புற வடிவமைப்பு:

சீறும் சிறுத்தையை மனதில் கொண்டு இந்த புதிய எஸ்யூவியை வடிவமைத்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்தது. ஸ்கார்ப்பியோ, ஸைலோவைவிட எடுப்பாக தெரியும் வகையில் மஹிந்திரா வாரிசுகளுக்குரிய வடிவமைப்புடன் கூடிய முன்பக்க கிரில், பக்கவாட்டில் பெல்ட்லைன் சற்று தடிமனாகவும், அதற்கு பொருத்தமாக பெரிய வீல் ஆர்ச் ஆகியவை புதிய எக்ஸ்யூவிக்கு படு கம்பீரமான தோற்றத்தை கொடுக்கிறது.

உள்பக்க வடிவமைப்பு:

உள்பக்க வடிவமைப்பு:

உள்பக்கத்தில் பெரும்பாலான பகுதிகளை கறுப்பு மற்றும் பழுப்பு ஆக்கிரமித்துள்ளது. நீண்டு குறுகிய வடிவமைப்புடன் கூடிய சென்ட்ரல் கன்சோல் டெஷ்போர்டு உச்சியில் துவங்கி கியர் லிவர் இருக்கும் பகுதியில் முடிவடைகிறது. சென்ட்ரல் கன்சோல் உச்சியில் நேவிகேஷன வசதிகொண்ட டச் ஸ்கிரீனும், அதைத்தொடர்ந்து கன்ட்ரோல் பட்டன்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஸ்டீயரிங் வீல் அழகாகவும், கைக்கு லாவகமாக இருக்கும் ஸ்போக்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இடவசதி

இடவசதி

புதிய எக்ஸ்யூ500 வில் 7 பேர் தாராளமாக அமர்ந்து செல்லலாம். இரண்டாவது வரிசை மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளின் லெக் ரூம் அதிக இடத்தை கொண்டுள்ளதால் கால்களை நீட்டி மடக்கி உட்கார வசதியாக இருக்கிறது.

 பெர்ஃபார்மென்ஸ், கையாளுமை

பெர்ஃபார்மென்ஸ், கையாளுமை

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது மிட்ரேஞ்சில் எக்ஸ்யூவி 500 எஞ்சின் தனது பராக்கிரமத்தை நமக்கு காட்டுகிறது.மேலும், 140 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும்போதுகூட பாதுகாப்பான உணர்வை தருகிறது. ஏன் நகரங்களில் ஓட்டும்போதுகூட ஒரு பெரிய காரை ஓட்டுகிறோம் என்ற பதட்டப்பட வைக்காமல் ஓட்டுவதற்கு இலகுவாக இருக்கிறது. மூன்று வரிசை இருக்கைகளுக்கும் தனித்தனியான ஏசி வென்ட், புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளன. இதன் டாப் வேரியண்ட்டான டபிள்யூ-8ல் வாய்ஸ் கன்ட்ரோல் ஆடியோ சிஸ்டம் இருக்கிறது.

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

இதன் டாப்வேரியண்ட்டில் காரை சறுக்காமல் தடுக்கும் இஎஸ்பி தொழில்நுட்பம், டயரில் காற்றின் அளவை காட்டும் கருவி, 6 ஏர்பேக்குகள், ரிமோட் லாக்கிங் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

 மைலேஜ்

மைலேஜ்

புதிய எக்ஸ்யூவி 500 நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 15.1 கிமீ மைலேஜையும், நகர்ப்புறங்களில் லிட்டருக்கு 11 கிமீ மைலேஜையும் கொடுக்கிறது.

முழுமையான தகவல்கள்

முழுமையான தகவல்கள்

ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் ரூபாய் வரையிலான மார்க்கெட்டில் மிகச்சிறப்பான தோற்றம், வசதிகள் நிரம்பப்பெற்ற இந்த எஸ்யூவி பற்றிய கூடுதல் தகவல்களை காண இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
The Mahindra XUV 500 has been appreciated for its style, space and practicality since the day it was launched. It now adds another cap to its illustrious career after crossing the coveted one lakh sales mark.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X