மாருதி செலிரியோ ஏஎம்டி மாடலுக்கான வெயிட்டிங் பீரியட் குறைந்தபாடில்லை

மாருதி செலிரியோ காரின் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலுக்கான காத்திருப்பு காலம் தொடர்ந்து நீண்டு கொண்டே வருகிறது.

இன்றைக்கு செலிரியோவின் ஏஎம்டி மாடலை முன்பதிவு செய்தால் 5 முதல் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Maruti Celerio

இத்தாலியிலிருந்து மாருதி செலிரியோவுக்கான ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வகை டிரான்ஸ்மிஷனை சப்ளை செய்யும் மேக்னடி மரெல்லி நிறுவனத்திடம் ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால், அந்த நிறுவனம் தேவையை நிறைவு செய்வதற்கு திணறி வருகிறது.

இதன் காரணமாக செலிரியோவின் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடலுக்கான காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் சப்ளை சீரடைந்துவிட்டால், செலிரியோ கார்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளது. இதன்பின்னர் காத்திருப்பு காலம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Demand for Maruti Celerio continues to grow, particularly for the Automatic Manual Transmission (AMT) variant. Launched at the Auto Expo in February, the Celerio has managed to far exceed expectations of the manufacturer and now has a waiting period that can extend beyond half a year.
Story first published: Tuesday, April 29, 2014, 16:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X