செலிரியோ ஆட்டோமேட்டிக் மாடலுக்கு அமோக வரவேற்பு

By Saravana

கடந்த மாதம் விற்பனைக்கு வந்த மாருதி செலிரியோ கார் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக, ஆட்டோமேட்டிக் மாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதன்மூலம், ஆட்டோமேட்டிக் கார் மார்க்கெட்டில் புதிய புரட்சிக்கு செலிரியோ வித்திட்டிருக்கிறது. செலிரியோவுக்கு கிடைத்த வரவேற்பு பிற கார் நிறுவனங்களையும் யோசிக்க வைத்துள்ளது. எனவே, செலிரியோவில் உள்ளது போன்ற ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களின் வரவு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு

முன்பதிவு

இதுவரை செலிரியோ காருக்கு 20,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். அதில், 52 சதவீதத்தினர் ஆட்டோமேட்டிக் மாடலுக்கே முன்பதிவு செய்துள்ளனர்.

விலை குறைப்பு

விலை குறைப்பு

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட வரிச்சலுகை அறிவிப்பு காரணமாக செலிரியோ காரின் விலை குறைக்கப்பட்டது. எனவே, செலிரியோவுக்கான முன்பதிவு மேலும் அதிகரித்து வருகிறது.

 டாப் வேரியண்ட்

டாப் வேரியண்ட்

செலிரியோ ஆட்டோமேட்டிக் காரின் பேஸ் வேரியண்ட்டைவிட, டாப் வேரியண்ட்டுக்குத்தான் அதிக முன்பதிவு கிடைத்து வருகிறது. இது மாருதிக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், மொத்த முன்பதிவில் 25 சதவீதம்தான் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு செய்யப்படும் என்று மாருதி கணித்திருந்தது. ஆனால், நிலைமை வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது.

 உற்பத்தி

உற்பத்தி

மாருதி செலிரியோவுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தொடர்ந்து, உற்பத்தியை உயர்த்துவது குறித்து மாருதி பரிசீலித்து வருகிறது. ஏனெனில், ஈக்கோஸ்போர்ட்டுக்கு ஏற்பட்ட நிலை போன்று செலிரியோவுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக உற்பத்தியை கூட்டிவிடுவதே நல்லது என்று மாருதி முடிவு செய்துள்ளது.

 அதிகாரி தகவல்

அதிகாரி தகவல்

உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலான விகிதாச்சாரத்தை சீரான அளவில் கொண்டு செல்லும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளதாக மாருதியின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு தலைமை அதிகாரி மாயங்க் பரீக் கூறியிருக்கிறார். தற்போது செலிரியோவுக்கான ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இறக்குமதி செய்யப்படுவதாகவும், ஓர் ஆண்டுக்கு பிறகு உள்நாட்டிலிருந்து இந்த வகை டிரான்ஸ்மிஷனை சப்ளை பெற திட்டமிட்டிருப்பதாகவும் மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா தெரிவித்திருக்கிறார்.

 வரவேற்பு எதனால்?

வரவேற்பு எதனால்?

பொதுவாக, மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களைவிட ஆட்டோமேட்டிக் மாடல்களின் விலை ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வித்தியாசமிருக்கும். ஆனால், செலிரியோவின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலுக்கும், ஆட்டோமேட்டிக் மாடலுக்குமான விலை வித்தியாசம் வெறும் ரூ.37,843 மட்டுமே. இதுவே வாடிக்கையாளர்களை பெரிதும் கவர காரணம்.

மைலேஜ்

மைலேஜ்

ஆட்டோமேட்டிக் மாடல்கள் மைலேஜ் தராது என்ற கோட்பாட்டையும் செலிரியோ உடைத்தெறிந்துள்ளது. ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜ் தரும் என்று மாருதி தெரிவிக்கிறது. விலை, மைலேஜ் ஆகியவற்றில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களுக்கு போட்டியை கொடுக்கும் செலிரியோவின் ஆட்டோமேட்டிக் மாடல் நிச்சயம் மார்க்கெட்டில் பெரிய அளவில் வலம் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

 வரிசை கட்டும் மாடல்கள்

வரிசை கட்டும் மாடல்கள்

இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட காராக வந்த மாருதி செலிரியோ மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால், டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் இதே வகை கியர்பாக்ஸ் கொண்ட புதிய மாடல்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கின்றன.

Most Read Articles
English summary
Fifty one. That's the percentage of Maruti Celerio automatic cars that have been booked compared to its manual variant. Maruti Celerio, launched on February 6, 2014 has been receiving some 1000 odd bookings everyday and over 500 of them are automated manual transmission (AMT) variants.
Story first published: Monday, March 3, 2014, 16:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X