மாருதி செலிரியோவின் புதிய மேனுவல் கியர் பாக்ஸ் பற்றிய கூடுதல் விபரம்

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக இருக்கும் மாடல்களில் அதிக எதிர்பார்ப்புக்கு இலக்காகியுள்ள மாடல் மாருதியின் புதிய செலிரியோ ஹேட்ச்பேக் கார். ஏ- ஸ்டார், எஸ்டீலோ இடங்களை நிரப்புவதற்காக வரும் இந்த புதிய கார் மாடலின் மீதான ஈர்ப்பு கூடியிருப்பதற்கான புதிய காரணம் கிளட்ச் இல்லாத மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வருவதும்தான்.

இதுபோன்ற டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்தியாவின் முதல் காராக செலிரியோவை மார்க்கெட் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த புதிய டிரான்ஸ்மிஷனின் சிறப்புகள் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

நாமகரணம்

நாமகரணம்

Automated Manual Transmission(AMT) என்று கூறப்படும் இந்த புதிய டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் ஓட்டுவதற்கு மிக எளிதாக இருக்கும் என்பதை குறிப்பிடும் வகையில், Celerio EZDrive, அதாவது Easy drive என்ற சுருக்கத்தை பெயராக இட்டுள்ளது மாருதி.

 புதிய முறை

புதிய முறை

கியரை மேனுவலாக மாற்றும்போது கிளட்ச்சை எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷனுக்கான எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் எனப்படும் இசியூ., கம்ப்யூட்டர்தான் கட்டுப்படுத்தும்.

 எடை குறைவு

எடை குறைவு

சாதாரண ஆட்டோமேட்டிக் கார்களின் டிரான்ஸ்மிஷனைவிட இந்த வகை டிரான்ஸ்மிஷனின் எடை மிக குறைவு. இதன்மூலம், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும் காராக இருக்கும்.

 விலையிலும் குறைவு

விலையிலும் குறைவு

மேனுவல் டிரான்ஸ்மிஷனை விட ஆட்டோமேட்டிக் மாடல்களின் விலை ரூ.80,000 வரை அதிகமிருக்கிறது. ஆனால், இந்த காரின் மேனுவல் டிரான்ஸ்மிஷனை விட ஆட்டோமேட்டிக் மாடல் விலை ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை மட்டுமே கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஓட்டுவதற்கு எளிது

ஓட்டுவதற்கு எளிது

கிளட்ச் இல்லாத இந்த மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார் நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு சிறந்ததாக இருக்கும். மேலும், முந்தைய ஏ ஸ்டார் காரைவிட சிறந்த இடவசதி, புதிய டிசைன் மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனத்துடன் வருவதால் வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய செலிரியோ காரில் 67 பிஎச்பி ஆற்றலையும், 90 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.0 லிட்டர் கே- சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கார் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடந்த ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட சுஸுகி ஏ- விண்ட் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ- விண்ட் கான்செப்ட்டுக்கும், தற்போது தயாரிப்பு நிலையை தொட்டிருக்கும் செலிரியோவின் டிசைனுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்காது.

Most Read Articles
 
Please Wait while comments are loading...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X