ஆட்டோமேட்டிக் மார்க்கெட்டின் புரட்சிகர கார் மாடல் மாருதி செலிரியோ!

நம் நாட்டில் ஆட்டோமேட்டிக் கார்களுக்கான மார்க்கெட் இன்னும் மந்தமாகவே உள்ளது. அதிக விலை, குறைவான மைலேஜ் மற்றும் கைக்கு அடங்காத பராமரிப்பு செலவு போன்றவை ஆட்டோமேட்டிக் கார்களை விட்டு வாடிக்கையாளர்களை தள்ளியே நிற்க வைத்துள்ளது.

இந்த நிலையில், மேற்கண்ட மூன்று முக்கிய விஷயங்களை அடித்து உடைத்து ஒரு புரட்சிகரமான செமி ஆட்டோமேட்டிக் மாடலாக களம் புகுந்துள்ளது மாருதி செலிரியோ. நகர்ப்புறத்துக்கும், நெடுஞ்சாலைக்கும் சிறந்த செமி ஆட்டோமேட்டிக் மாடல் என்பதுடன், தடாலாடியான விலையில் வந்து போட்டியாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது மாருதி செலிரியோ.

இந்த காரை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வமும், தயக்கமும் நிலவுகிறது. அதையும் களையும் விதமாக இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

குறைவான விலை

குறைவான விலை

ஆட்டோமேட்டிக் கார்களுக்கும், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களுக்கும் இடையில் ரூ.1 லட்சம் வரை விலை வித்தியாசம் இருக்கிறது. ஆனால், மாருதி செலிரியோவின் மேனுவல் டிரான்ஸமிஷன் வேரியண்ட்டைவிட ஆட்டோமேட்டிக் மாடலின் விலை ரூ.39,000 மட்டுமே கூடுதலாகும். இது மிக சவாலான விலையாகவே கருதப்படுகிறது. தவிர, வேறு ஆட்டோமேட்டிக் கார்களுடன் ஒப்பிடும்போது மாருதி செலெரியோவின் செமி ஆட்டோமேட்டிக் மாடல் விலை ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை குறைவு.

 மைலேஜ் தருமா?

மைலேஜ் தருமா?

ஆட்டோமேட்டிக் கார்களை வாங்குவதற்கு பயப்படுவதற்கு மற்றுமொரு காரணம் மைலேஜ். மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களைவிட ஆட்டோமேட்டிக் கார்கள் 25 முதல் 30 சதவீதம் குறைவான மைலேஜ் தரும். ஆனால், மாருதி செலிரியோவின் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் பார்த்தாலும் இது சிறப்பான மைலேஜை வழங்கும் என்று நம்பிக்கையை தருகிறது.

பராமரிப்பு செலவு

பராமரிப்பு செலவு

ஆட்டோமேட்டிக் கார்களின் மிகப்பெரிய பிரச்னை சிக்கலான தொழில்நுட்பம். மேலும், உதிரிபாகங்களின் விலையும் அதிகம். ஆனால், மாருதி செலிரியோவின் கியர் பாக்ஸ் அமைப்பு மிக எளிய முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக மாருதி தெரிவிக்கிறது. இதனால், பராமரிப்பு செலவு சாதாரண ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

வாரண்டி

வாரண்டி

இந்த காருக்கு 4 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ.,க்கான வாரண்டியையும் மாருதி வழங்குகிறது. இதுவும் இந்த காரின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவதாக இருக்கிறது.

பெண்களுக்கும் ஏற்றது

பெண்களுக்கும் ஏற்றது

கிளட்ச்பெடல் இல்லாமல் வந்திருப்பது, நகர்ப்புறத்துக்கு ஏற்ற காராக இருக்கிறது. மேலும், பெண்கள் ஓட்டுவதற்கும் இது மிகச் சிறந்த கார் மாடல்.

 கூடுதல் நம்பிக்கை

கூடுதல் நம்பிக்கை

ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்ற புதிய வகை டிரான்ஸ்மிஷனை இந்திய மார்க்கெட்டுக்கு மாருதி அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஸெஸ்ட் காரிலும், மஹிந்திரா நிறுவனம் தனது குவான்ட்டோ எஸ்யூயில் இதே டிரான்ஸ்மிஷனையும் அவசரமாக அறிமுகம் செய்துள்ளன. இதன்மூலம், ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷனுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று கார் நிறுவனங்கள் கருதுவது அப்பட்டமாக தெரிகிறது. அடுத்தடுத்து இந்த வகை டிரான்ஸ்மிஷன்களுடன் கார் மாடல்கள் வருவதும், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

 புது டிரெண்ட்

புது டிரெண்ட்

1990 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் கார்களில் ஏசி வசதி புது டிரெண்ட்டாகவும், 2,000ஆம் ஆண்டுகளில் பவர் ஸ்டீயரிங் புது டிரென்ட்டாகவும் இருந்தது. அதுபோன்று, வரும் ஆண்டுகளில் இந்த புதிய ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்கள் புது டிரென்டாக அமையும் என மாருதியின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைத் துறை உயரதிகாரி மாயங்க் பரீக் கூறியுள்ளார்.

 இந்தியாவுக்கு பெஸ்ட் மாடல்

இந்தியாவுக்கு பெஸ்ட் மாடல்

ஐரோப்பிய நாடுகளில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், இந்தியாவில் இந்த வகை டிரான்ஸ்மிஷன் பெரிய வெற்றியை பெறும் என்று கார் மார்க்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இதன் குறைவான பராமரிப்பு செலவு வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததாக அமையும் என்று கூறுகின்றனர்.

விலை விபரம்

விலை விபரம்

விலை விபரம்

மேனுவல் டிரான்ஸ்மிஷன்

LXi - ரூ.3.90 லட்சம்

VXi - ரூ. 4.20 லட்சம்

ZXi - ரூ.4.50 லட்சம்

ZXi Optional pack- ரூ.4.96 லட்சம்

கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன்

VXi - ரூ.4.29 லட்சம்

ZXi - ரூ.4.59 லட்சம்

(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம்)

முழுமையான விபரம்

முழுமையான விபரம்

இந்த காரின் முழுமையான சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X