இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காராக வரும் மாருதி சியாஸ்!

By Saravana

அடுத்த மாதம் புத்தம் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பண்டிகை காலத்தில் மிட்சைஸ் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் பட்டியலில் இந்த காரும் இடம்பெற்றிருப்பதால், இந்த கார் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை புதிய மாருதி சியாஸ் பெற இருக்கிறது. தற்போது மிட்சைஸ் செக்மென்ட்டில் கோலோய்ச்சி வரும் ஹோண்டா சிட்டியின் டீசல் மாடல்தான் இன்றைய தேதியில் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையுடன் வலம் வருகிறது. இந்த நிலையில், சிட்டி மார்க்கெட்டை உடைக்கும் நோக்கத்தில் சியாஸ் காரை மாருதி களமிறக்க உள்ளது.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் மைலேஜ், முன்பதிவு உள்ளிட்ட விபரங்களை காணலாம்.

இப்போது நம்பர்-1 மைலேஜ் கார்

இப்போது நம்பர்-1 மைலேஜ் கார்

ஹோண்டா சிட்டி காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று தெரிவிக்கிறது. ஆனால், சியாஸ் டீசல் மாடல் இதனை விட அதிக மைலேஜ் தரும் வகையில் இருக்கும்.

சியாஸ் மைலேஜ்

சியாஸ் மைலேஜ்

சியாஸ் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 26.21 கிமீ மைலேஜ் தரும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. எனவே, இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் மாடலாக வர இருக்கிறது. இதேபோன்று பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.73 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது.

வடிவம்

வடிவம்

ஹோண்டா சிட்டியைவிட நீளத்திலும் பெரிய காராக இருக்கும். ஹோண்டா சிட்டி கார் 4,440 மிமீ நீளமும், 1,730மிமீ அகலமும், 1,485மிமீ உயரமும் கொண்டது. ஆனால், சியாஸ் கார் 4,490மிமீ நீளமும், 1,730மிமீ அகலமும், 1,485மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். ஹோண்டா சிட்டி காரின் வீல் பேஸ் 2,600மிமீ. ஆனால், சியாஸ் காரின் வீல் பேஸ் 2,650மிமீ என்பதால் உட்புறத்தில் இடவசதியிலும் சிறப்பானதாக இருக்கும்.

முன்பதிவு துவக்கம்

முன்பதிவு துவக்கம்

புதிய மாருதி சியாஸ் காருக்கு இன்று முன்பதிவு துவங்கப்படுகிறது. ரூ.21,000 முன்பணத்துடன் புதிய சியாஸ் காருக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.7.19 லட்சம் முதல் ரூ.11.05 லட்சம் விலையில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
According to Maruti Suzuki, Ciaz (diesel)sedan will be India's most fuel efficient car with an efficiency of 26.21 kmpl. 
Story first published: Wednesday, September 3, 2014, 10:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X