செலிரியோ உள்பட மாருதி கார்களின் விலை குறைந்தது - முழு விபரம்

இடைக்கால பட்ஜெட்டின் எதிரொலியால் மாருதி கார்களின் விலை குறைந்தபட்சம் ரூ.8,197 முதல் அதிகபட்சம் ரூ.30,984 வரை குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த மாருதி செலிரியோ காரின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

தினமும் 1,000 கார்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டு வரும் செலிரியோ காரின் விலை குறைக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாருதி கார்களின் குறைக்கப்பட்ட விலை விபரங்கள் மாடல் வாரியாக ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளன.

 ஆல்ட்டோ 800

ஆல்ட்டோ 800

ஆல்ட்டோ 800 காரின் விலை 3.4 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை வேரியண்ட் வாரியாக குறைக்கப்பட்டுள்ளது. மாருதி ஆல்ட்டோ 800 கார் விலை குறைப்பு மூலம் ரூ.2.72 லட்சம் முதல் ரூ.3.52 லட்சம் வரையிலான விலையில் இனி விற்பனை செய்யப்படும்.

வேகன் ஆர்

வேகன் ஆர்

ரூ.3.61 லட்சம் முதல் ரூ.4.50 வரையிலான விலையில் விற்கப்பட்டு வந்த மாருதி வேகன் ஆர் காரின் விலை ரூ.3.48 லட்சம் முதல் ரூ.4.37 லட்சம் விலையில் இனி விற்பனை செய்யப்படும்.

 மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ

ரூ.3.90 லட்சம் முதல் ரூ.4.96 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த மாருதி செலிரியோவின் விலை ரூ.3.76 லட்சம் முதல் ரூ.4.78 லட்சம் வரையிலான விலையில் இனி விற்பனை செய்யப்பட உள்ளது. ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலின் விஎக்ஸ்ஐ வேரியண்ட் விலை ரூ.4.29 லட்சத்திலிருந்து ரூ.4.14 லட்சமாகவும், ரூ.4.59 விலையில் விற்பனைக்கு வந்த இசட்எக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.4.43 லட்சமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மாருதி ரிட்ஸ்

மாருதி ரிட்ஸ்

ரூ.4.38 லட்சம் முதல் ரூ.6.38 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் விற்பனை செய்யப்பட்டு வந்த, மாருதி ரிட்ஸ் காரின் விலை ரூ.4.23 லட்சம் முதல் ரூ.6.15 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும்.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

ரூ.4.58 லட்சம் முதல் ரூ.6.95 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த, மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை ரூ.4.42 லட்சம் முதல் ரூ.6.70 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும்.

ஸ்விஃப்ட் டிசையர்

ஸ்விஃப்ட் டிசையர்

ரூ.5.03 லட்சம் ஆரம்ப விலை முதல் விற்பனை செய்யப்பட்டு வந்த, மாருதி ஸ்விஃப்ட் டிசையர் காரின் விலை ரூ.4.85 லட்சம் முதல் ரூ.7.82 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

ரூ.5.99 லட்சம் முதலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த, மாருதி எர்டிகா காரின் விலை ரூ.5.8 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X