குறைவான விலை ஆல்ட்டோ, ஸ்விஃப்ட் ஹைபிரிட் மாடல்களை களமிறக்கும் மாருதி!

By Saravana

ஆட்டோமேட்டிக் கார்கள் என்றாலே மிகவும் விலை அதிகம் என்ற மாயை மாற்றி, செலிரியோவில் புதிய ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்ற புதிய வகை கியர்பாக்ஸ் ஒன்றை மாருதி அறிமுகம் செய்தது. எதிர்பார்த்தது போலவே இந்த புதிய கியர் பாக்ஸ் கொண்ட செலிரியோ மாடலுக்கு ஏக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதேபோன்று, குறைவான விலை கொண்ட ஹைபிரிட் தொழில்நுட்பத்தை மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி உருவாக்கி வருகிறது. ஜப்பானில் உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய வகை கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்திற்கு மாருதி நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு எஞ்சினியர்களும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். ஆல்ட்டோ உள்பட மாருதியின் பிரபல கார் மாடல்களில் இந்த புதிய ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


இறுதிக்கட்டத்தில்...

இறுதிக்கட்டத்தில்...

ஜப்பானில் உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய ஹைபிரிட் தொழில்நுட்ம் கான்செப்ட் என்ற நிலைகளை தாண்டி தற்போது இறுதிக்கட்ட சோதனைகளில் இருப்பதாக மாருதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாடல்கள்

மாடல்கள்

ஆல்ட்டோ, ஸ்விஃப்ட் உள்ளிட்ட முக்கிய மாடல்களில் இந்த புதிய ஹைபிரிட் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடலைவிட இந்த ஹைபிரிட் மாடல்கள் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, ஹைபிரிட் சிஸ்டத்துடன் வரும் மாருதி கார்கள் லிட்டருக்கு 25 கிமீ முதல் 30 கிமீ வரை மைலேஜ் தரும் வகையில் இருக்கும்.

குறைவான விலை

குறைவான விலை

ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார்கள் விலை அதிகம் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால், இந்த புதிய ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட மாருதி கார் மாடல்கள் பெட்ரோல் மாடலைவிட சற்று கூடுதல் விலையுடன் வருகிறது. அதாவது, ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடல்களை போன்றே சற்றே விலை வித்தியாசம் கொண்டதாக இருக்கும்.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் புதிய ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட மாடல்களை மாருதி அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Country's largest car maker Maruti Suzuki is working on a low cost hybrid technology for its small cars. 
Story first published: Monday, September 22, 2014, 13:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X