16ல் மாருதி ஸ்விஃப்ட் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்?!

By Saravana

வரும் 16ந் தேதி மாருதி ஸ்விஃப்ட் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விற்பனையில் இந்தியாவின் டாப்-3 மாடல்களில் ஒன்றாக இருந்து வரும் ஸ்விஃப்ட் காரில் ஆட்டோமேட்டிக் மாடல் வருவது கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டியுள்ளது.

 எதிர்பார்ப்பு பொய்த்தது

எதிர்பார்ப்பு பொய்த்தது

செலிரியோவின் ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலுக்கு எழுந்த வரவேற்பையடுத்து, ஸ்விஃப்ட் காரிலும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுடன் அறிமுகம் செய்யப்பட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

பிராண்டு மதிப்பு

பிராண்டு மதிப்பு

ஏஎம்டி கியர் பாக்ஸ் கொண்ட மாடலை அறிமுகம் செய்வதால் ஸ்விஃப்ட் காரின் பிராண்டு மதிப்பு குலைந்து போய்விடும் என்று மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தற்போது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலை அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிசையர் டிரான்ஸ்மிஷன்

டிசையர் டிரான்ஸ்மிஷன்

மாருதி நிறுவனம் டிசையர் காம்பேக்ட் செடான் காரில் இருக்கும் அதே 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் ஸ்விஃப்ட் காரையும் அறிமுகம் செய்ய உள்ளது.

குழப்பம்

குழப்பம்

விரைவில் ஸ்விஃப்ட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வர இருக்கும் நிலையில், தற்போதைய மாடலிலேயே ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதா அல்லது ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அறிமுகம் செய்யப்பட உள்ளதா என்பதில் குழப்பம் நிலவுகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

மேனுவல் கியர் பாக்ஸ் மாடலைவிட ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.80,000 வரை விலை அதிகம் இருக்கும்.

Most Read Articles
English summary
According to reports, Maruti Suzuki to launch the Swift Automatic with the 4-speed automatic from the DZire and not an AMT unit.
Story first published: Monday, September 8, 2014, 8:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X