மாருதியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பதவி விலகினார்

By Saravana

மாருதி கார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவராக இருந்து வந்த மாயங் பரீக் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த இருபதாண்டுகளுக்கு மேல் மாருதி நிறுவனத்தில் மாயங் பரீக் பணிபுரிந்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக இவரது தலைமையின் மாருதி நிறுவனத்தின் கார் விற்பனை பல உச்சங்களையும், சாதனை இலக்குகளையும் தொட்டது. டிசையர், ஸ்விஃப்ட், செலிரியோ உள்ளிட்ட மாருதியின் பல முக்கிய மாடல்களின் அறிமுகம் செய்ததில் மாயங் பரீக் முக்கிய பங்கு வகித்தவர்.

Mayank Pareek

இந்தநிலையில், மாருதியின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர் பதவியிலிருந்து மாயங் பரீக் விலகியுள்ளார். அவர் விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1991ம் ஆண்டு மாருதி நிறுவனத்தில் பணியில் சேர்ந்த மாயங் பரீக் பனாரஸ் ஹிந்து பல்கலைகழகத்தில் பி-டெக் பட்டமும், பெங்களூர் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ., பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Most Read Articles
English summary
India's largest car manufacturer, Maruti, has just lost a very valuable asset, their Marketing Chief, Mayank Pareek. Pareek worked with Maruti for over two decades before putting down his papers. He was known as the face of Maruti. It was under his reign that the company reached its peak in terms of sales in the last five years.
Story first published: Wednesday, September 17, 2014, 14:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X