மாருதி ஓம்னி வேனின் 'கையேந்தி பவன்' கான்செப்ட்!

பல்வகை பயன்பாட்டு வாகன ரகத்தில் மிகக் குறைவான விலை கொண்ட மாடல் மாருதியின் ஓம்னி மினிவேன். பயணிகள் வாகனமாகவும், வியாபாரிகளுக்கான டெலிவிரி வேனாகவும் பல்வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், ஓம்னியின் கையேந்தி பவன் கான்செப்ட் மாடலை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைத்துள்ளது மாருதி கார் நிறுவனம். ஓம்னி லிசியஸ் கஃபே என்ற பெயரிலான இந்த கான்செப்ட் குறித்த சில கூடுதல் விபரங்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளன.

கையேந்தி பவன்

கையேந்தி பவன்

நடமாடும் உணவகம் போன்று ஓம்னி வேனில் பல வசதிகளை சிறப்பாக கொடுத்துள்ளனர். கடைசி வரிசை இருக்கையை எடுத்துவிட்டு, டேபிள், ப்ரிட்ஜ் போன்றவற்றை பொருத்தியுள்ளனர்.

வசதி

வசதி

பின்புறத்தில் உணவுப் பொருட்களை வைத்து கொடுப்பதற்காக டேபிள் ஒன்றும், அதற்கு கீழே குளிர்பானங்களை வைத்துக் கொள்ள வசதியாக ப்ரிட்ஜும் பொருத்தப்பட்டுள்ளது.

 மின் அடுப்பு

மின் அடுப்பு

பின்புறத்தில் இருக்கும் டேபிளில் மின் அடுப்பு மற்றும் டோஸ்ட்டர் ஆகியவை உள்ளன. இதன்மூலம், உணவுப் பொருட்களை சுட சுட வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும்.

கூடுதல் வசதி

கூடுதல் வசதி

பக்கவாட்டில் உள்ள கண்ணாடி ஜன்னலில் ஒரு சிறிய பலகை பொருத்தப்பட்டுள்ளது. அதில், உணவுப் பொருட்களை ஆர்டர் செய்வதற்கும், பணத்தை செலுத்துவதற்கும் வசதியாக பயன்படுத்த முடியும்.

இது கான்செப்ட் மட்டுமே

இது கான்செப்ட் மட்டுமே

இந்த கையேந்தி பவன் ஓம்னியில் உள்ள அமைப்பு, எவ்விதங்களில் ஓம்னியை வர்த்தக வாகனமாக தங்களது தொழிலுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை காட்டுவதற்காகவே இந்த மாடலை காட்சிக்கு வைத்துள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Maruti Omni Cafe will feed the masses in the future with their modified van. Omni has always been important to deliver goods, however the staff from Maruti has done an excellent job with modifying.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X