ரிட்ஸ், ஸ்விஃப்ட், டிசையர் கார்களின் டீசல் மாடல்களுக்கு மாருதி ரீகால்!

ரிட்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் டீசல் மாடல்களை திரும்ப அழைக்க இருப்பதாக மாருதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு முன் விற்பனையில் இருந்த ஸ்விஃப்ட், டிசையர் மாடல்கள் மற்றும் ரிட்ஸ் காரின் டீசல் மாடல்களில் வயரிங் பிரச்னை இருப்பதை மாருதி கண்டறிந்துள்ளது. இதையடுத்து, அந்த கார்களில் ஒயரிங் பிரச்னையை சரிசெய்து தருவதற்கு மாருதி முடிவு செய்தது.

Maruti Dzire

இதையடுத்து, 2010ம் ஆண்டு மார்ச் 8ந் தேதி முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப பெற இருப்பதாக மாருதி அறிவித்துள்ளது.

இதன்படி, 55,938 டிசையர் கார்களையும், 12,486 ஸ்விஃப்ட் கார்களையும், 1,131 ரிட்ஸ் கார்களையும் மாருதி திரும்ப அழைக்கிறது. மொத்தம் 69,555 கார்களை மாருதி திரும்ப அழைக்க உள்ளது.

இதுகுறித்து டீலர்கள் மூலம சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாமாக முன்வந்து இந்த ரீகால் அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்களது கார் ரீகால் அறிவிப்பில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Most Read Articles
English summary
Maruti Suzuki has recalled 69,555 diesel cars to rectify a problem with their wiring harnesses.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X