ஆண்டுக்கு 3 மில்லியன் கார்கள்: மெகா திட்டத்துடன் மாருதி தீவிரம்

By Saravana

ஆண்டுக்கு 3 மில்லியன் கார்களை விற்பனை செய்வதற்கான இலக்குடன் மாருதி காய்களை நகர்த்தி வருகிறது.

இந்திய கார் மார்க்கெட்டில் மிகப்பெரிய பங்களிப்பை மாருதி நிறுவனம் வழங்கி வருகிறது. கிட்டத்தட்ட 50 சதவீத பங்களிப்பு மாருதியிடமிருந்து வருகிறது.

Maruti Celerio

சென்ற நிதியாண்டில் மாருதி நிறுவனம் 11.5 லட்சம் கார்களை விற்பனை செய்தது. இந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2 மில்லியன் கார்களை விற்க இலக்கு வைத்துள்ளது.

மேலும், எதிர்காலத்தில் ஆண்டுக்கு 3 மில்லியன் கார்களை விற்பனை செய்யும் இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளையும் துவங்கியுள்ளது இந்த திட்டம் "மாருதி 2.0" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

குஜராத்தில், சுஸுகி நிறுவனம் அமைக்கும் பிரம்மாண்ட ஆலை மூலம் இந்த புதிய இலக்குகளை தொடுவது எளிதாக சாத்தியமாகும் என்றும் மாருதி தெரிவிக்கிறது.

மேலும், ஹரியானாவில் உள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தை ரூ.2,000 கோடி முதலீட்டில் விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

மேலும், எஸ்யூவி உள்ளிட்ட புதிய ரக வாகன மார்க்கெட்டிலும் முக்கிய இடத்தை பெறுவதற்காக புதிய மாடல்களையும் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
India's leading automaker Maruti, have set a future target of selling 3 million cars annually, after revolutionising the transport market in India for 30 years. They have planned ahead for the next 30 years, calling the next phase "Maruti 2.0".
Story first published: Monday, August 11, 2014, 16:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X