அடுத்து இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் டைட்டில் செலிரியோ டீசலுக்குத்தான்!

ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு மாருதி செலிரியோ ஓர் சிறப்பான சாய்ஸ். கிளட்ச் பெடல் தொந்தரவு இல்லாத இந்த காரை வாங்க பலர் திட்டமிட்டிருப்பீர்கள். இந்த காரின் அனைத்து வேரியண்ட்டுகளின் ஆன்ரோடு விலையையும் ஒரு சில க்ளிக்குகளில் பெறுவதற்கு கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். உங்கள் ஊரின் ஆன்ரோடு விலையையும் நீங்கள் இங்கே மிக எளிதாக பெற முடியும்.

திருநெல்வேலியில் செலிரியோ ஆன்ரோடு விலை!

மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் தீவிர சாலை சோதனைகளில் இருந்து வருகிறது. மேலும், முக்காடு போடாமல் இந்த புதிய கார் டெஸ்ட் செய்யப்பட்டு வருவதால், விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, செலிரியோவின் டீசல் மாடலில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக வெளியானத் தகவல், செலிரியோ மீது அதிக ஆவல் எழுந்துள்ளது. இவற்றையெல்லாவற்றையும் விட, அடுத்து இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையும் செலிரியோவுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


 தயாரிப்பு நிலை மாடல்

தயாரிப்பு நிலை மாடல்

சோதனையின்போது கேமராக் கண்களில் சிக்கிய செலிரியோ டீசல் காரின் முன்புற ஃபென்டரில் DDiS பேட்ஜ் இருந்தது. மேலும், இருக்கைகள் பிளாஸ்டிக் கவர்கள் போடப்பட்டிருந்ததால், இது தயாரிப்பு நிலை மாடலாகவே கருதப்படுகிறது. எனவே, அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று ஊர்ஜிதமாகியுள்ளது.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

இந்த காரில் மாருதி நிறுவனம் உருவாக்கியிருக்கும் 2 சிலிண்டர் கொண்ட புதிய 792சிசி டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 45- 50 பிஎச்பி பவரையும், 120- 130என்எம் டார்க்கையும் அளிக்கும் என்று தெரிகிறது. இதே எஞ்சின் மாருதியின் முதல் மினி டிரக்கிலும் பொருத்தப்பட உள்ளது.

ஏஎம்டி கியர்பாக்ஸ்

ஏஎம்டி கியர்பாக்ஸ்

புதிய செலிரியோ டீசல் மாடலில் ஏஎம்டி எனப்படும் தானியங்கி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது உறுதியானால், மாருதியின் முதல் டீசல் ஆட்டோமேட்டிக் கார் என்ற பெருமையும் கிடைக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

இந்த புதிய செலிரியோ டீசல் கார் லிட்டருக்கு 30 கிமீ வரை மைலேஜ் தரும் என்று ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அடுத்ததாக இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமை செலிரியோவுக்கு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.4.60 லட்சம் விலையில் மாருதி செலிரியோ டீசல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. செவர்லே பீட் டீசல் மற்றும் ஃபோர்டு ஃபிகோ டீசல் கார்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Maruti Celerio diesel has been caught on the camera again, this time showing the DDiS badge on its front fender.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X