செலிரியோ காரின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்தும் மாருதி!

By Saravana

தேவை அதிகம் இருந்து வருவதால், செலிரியோ காரின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த மாருதி முடிவு செய்துள்ளது.

ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்ற புதிய கியர் அமைப்புடன் வந்த மாருதி செலிரியோ கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Maruti Celerio

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் நல்லதொரு எண்ணிக்கையில் முன்பதிவை பெற்று வருகிறது. ஒரு ஆட்டோமேட்டிக் மாடலுக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது இந்திய கார் மார்க்கெட்டில் வரலாற்றிலும் இதுவே முதல்முறை.

செலிரியோவின் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலுக்கு இந்தளவு வரவேற்பு கிடைக்கும் என்று மாருதியும் எதிர்பார்க்கவில்லை. இந்தநிலையில், செலிரியோவின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த முடிவு செய்துள்ளது.

மாதத்திற்கு 5,000 செலிரியோ கார்கள் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை மாதத்திற்கு 10,000 கார்களாக உயர்த்த மாருதி முடிவு செய்துள்ளது.

இருப்பினும், உதிரிபாக சப்ளையை திடீரென உயர்த்துவதில் சப்ளையர்களுக்கு சிக்கல்கள் இருக்கின்றன. சப்ளையர்கள் தயாராகிவிட்டால், செலிரியோவின் உற்பத்தியை மாருதி உயர்த்த முடிவு செய்துள்ளது.

Most Read Articles
English summary
Naturally, this has not gone unnoticed by the automaker which now wants to cash in on it before demand goes sour. Due to this the automaker has now reportedly decided to increase production from the current 5,000 units to 10,000 units per month.
Story first published: Tuesday, March 25, 2014, 14:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X