விற்பனைக்கு வரும் முன்பே புதிய மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு குவிகிறது!

By Saravana

இன்னும் விற்பனைக்கு கொண்டு வரப்படாத நிலையிலேயே, புதிய மாருதி சியாஸ் செடான் காருக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. இந்த புதிய கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கடந்த 3ந் தேதி இந்த புதிய காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டது. சில நாட்களிலேயே 3,000 சியாஸ் கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சியாஸ் காரின் முன்பதிவு பலமான எண்ணிக்கை தொட்டுள்ளது. இது மாருதிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. எஸ்எக்ஸ்-4 செடான் கார் இருந்தவரை பெரிய அளவில் பிரயோஜனமில்லாமல் இருந்து வந்தது. அதற்கு மாற்றாக வரும் புதிய சியாஸ் காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மாருதியின் எதிர்கால வர்த்தக நம்பிக்கையை கூட்டியிருக்கிறது.


முன்பதிவு/உற்பத்தி

முன்பதிவு/உற்பத்தி

இதுவரை 6,000 பேர் புதிய மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு செய்துவிட்டனர். இதற்கு தகுந்தவாறு விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே போதுமான கார்களை இருப்பு வைக்கும் விதமாக உற்பத்தியும் துவங்கப்பட்டுவிட்டது. இதுவரை 9,000 சியாஸ் கார்களை மாருதி உற்பத்தி செய்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 90.70 எச்பி பவரையும், 130 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதேபோன்று, டீசல் மாடலில் 88.73 எச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.3 லிட்டர் ஃபியட் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

மாருதி சியாஸ் கார் அதிக வரவேற்பை பெற்றிருப்பதற்கு காரணங்களில் டீசல் மாடலின் மைலேஜும் முக்கியமானதாக இருக்கிறது. டீசல் மாடல் லிட்டருக்கு 26.21 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெற இருக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

பியர்ல் ஸ்நோ ஒயிட், பியர்ல் மெட்டாலிக் டிகினிட்டி பிரவுன், பியர்ல் சங்கிரியா ரெட் ஆகிய வண்ணங்களில் வருகிறது. தவிரவும், மெட்டாலிக் சில்க்கி சில்வர், மெட்டாலிக் கிளிஸ்டனிங் கிரே, மிட்நைட் பிளாக் மற்றும் மெட்டாலிக் கிளியர் பீஜ் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

வசதிகள்

வசதிகள்

ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், கிளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்டுகள், டச்ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், புளூடூத் கனெக்ட்டிவிட்டி, டியூவல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற சிறப்பம்சங்களுடன் வர இருக்கிறது.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.7.19 லட்சம் ஆரம்ப விலையில் புதிய மாருதி சியாஸ் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு நெருக்கடியை தரும்.

Most Read Articles
English summary
It is evident people like it as we have heard Maruti Suzuki dealers have received tremendous response. The Ciaz is a more premium option from the Japanese manufacturer, which will replace their SX4 model that did not perform as expected in India.
Story first published: Thursday, September 18, 2014, 15:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X