அடுத்த மாதம் மாருதி செலிரியோவின் சிஎன்ஜி மாடல் அறிமுகமாகிறது

By Saravana

அடுத்த மாதம் மாருதி செலிரியோவின் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் மாடலில் மட்டும், மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுடன் மாருதி செலிரியோ கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Maruti Celerio

இந்த மாடலுக்கு 8 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகிறது. இதனால், சில வேரியண்ட்டுகளுக்கான முன்பதிவை டீலர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அடுத்த மாதம் செலிரியோ காரின் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சிஎன்ஜி மாடலுக்கு காத்திருப்பு காலம் குறைவாக இருக்கும் என்பது மாருதியின் திட்டம். டெல்லியில் சிஎன்ஜி கிலோ 38 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

எனவே, குறைவான எரிபொருள் செலவீனம் கொண்ட காராகவும் இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என மாருதி கருதுகிறது.

68 எச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடனுடன் செலிரியோ வருகிறது.

ரூ.4.70 லட்சம் விலையில் புதிய மாருதி செலிரியோ சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு வரும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Now Suzuki has decided that they will offer their fast selling Celerio with a CNG option. However, the CNG variant will sport a manual gearbox and will not be available in the automatic option. The new CNG variant will be introduced to the Celerio range in June, 2014.
Story first published: Saturday, May 17, 2014, 15:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X