விரைவில் வருகிறது மாருதி செலிரியோ டீசல்... லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் தருமாம்!

By Saravana

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் டாப்- 15 பட்டியலில் ஒரு மாருதி கார் கூட இல்லையே என்ற பலர் வருத்தப்பட நேர்ந்தது. இந்த குறையை விரைவில் செலிரியோ போக்கிவிடும் வாய்ப்புள்ளது.

ஆம், லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் தரும் டீசல் எஞ்சினுடன் மாருதி செலிரியோ வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது காத்திருப்பு காலம் வெகுவாக கூடிக்கிடக்கும் செலிரியோவின் டீசல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டால் போட்டியாளர்களால் கையால் பிடிக்க இயலாத விற்பனையை பதிவு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.


சிறிய டீசல் எஞ்சின்

சிறிய டீசல் எஞ்சின்

செலிரியோவில் புதிய 800சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சினுடன் செலிரியோ அறிமுகம் செய்யப்பட்டால் இந்திய மார்க்கெட்டில் சிறிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார் என்ற பெருமையை பெறும். தற்போது 1000சிசி டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படும் வரும் செவர்லே பீட்தான் சிறிய டீசல் எஞ்சின் காராக இருந்து வருகிறது.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

மாருதி அறிமுகம் செய்ய இருக்கும் முதல் மினி டிரக் மற்றும் செலிரியோ காரில் இந்த புதிய 800சிசி டீசல் எஞ்சின் உயிர் கொடுக்கப் போகிறது.

மைலேஜ்

மைலேஜ்

செலிரியோ காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் தரும் வகையில் இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலம், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையும் செலிரியோவுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

எப்போது விற்பனை?

எப்போது விற்பனை?

நடப்பு நிதி ஆண்டிற்குள் செலிரியோவின் டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடல் மூலம் செலிரியோவின் காத்திருப்பு காலம் எகிறிக் கிடக்கும் நிலையில், லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் என்ற தாரக மந்திரத்துடன் செலிரியோ வந்தால் விற்பனை எகிடுதகிடாக அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

விலை

விலை

விலை நிர்ணயிப்பதில் மாருதி கைதேர்ந்த நிறுவனம். எனவே, மிகச்சவாலான விலையில் செலிரியோ டீசல் மாடலை விற்பனைக்கு கொண்டு வரப்படும் என ஆட்டோமொபைல் துறையினர் அடித்துக் கூறுகின்றனர்.

 மாருதியின் அதிக மைலேஜ் கார்

மாருதியின் அதிக மைலேஜ் கார்

தற்போது மாருதியின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை டிசையரின் டீசல் மாடல் பெற்றிருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 23.4 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary

 The Celerio AMT has been a successful product for the Japanese based manufacturer Suzuki. There have been demands and request by customers that the hatchback be offered wit a diesel engine. Maruti Suzuki has been working on a small and light 800cc diesel mill.
Story first published: Wednesday, June 25, 2014, 10:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X