செலிரியோ ஏஎம்டி மாடலின் உற்பத்தி அதிகரிக்க மாருதி முடிவு!

By Saravana

தேவையை கருதி, செலிரியோ ஏஎம்டி காரின் உற்பத்தியை அதிகரிக்க மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மாருதி செலிரியோ காரின் ஏஎம்டி என்ற தானியங்கி கியர்பாக்ஸ் கொண்ட மாடலுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. தற்போது மாதத்திற்கு 3,500 செலிரியோ ஏஎம்டி மாடல்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், தேவையை நிறைவு செய்ய முடியாத நிலை மாருதிக்கு ஏற்பட்டுள்ளது.

Maruti Celerio

இதனால், இந்த செலிரியோ மாடலுக்கு 4 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருந்து வருகிறது. காத்திருப்பு காலத்தை குறைக்கும் விதத்தில் மாதத்திற்கு 5,000 ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட செலிரியோ கார்களை உற்பத்தி செய்ய மாருதி முடிவு செய்திருக்கிறது.

குறைந்தது இரண்டு மாதங்களுக்காவது கூடுதல் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன்களை சப்ளை செய்யுமாறு மேக்னட்டி மரெல்லி நிறுவனத்திடம் மாருதி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், விரைவில் மாருதி செலிரியோ காரின் ஏஎம்டி மாடலின் உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இதன்மூலம், செலிரியோ ஏஎம்டி மாடலின் காத்திருப்பு காலம் வெகுவாக குறைக்கப்படும் என்பதோடு, புதிதாக முன்பதிவு செய்வோரும் விரைவாக காரை டெலிவிரி பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki is mulling to increase the production of its AMT models due to the high demand the new Celerio AMT and ready to launch the new Alto K10.
Story first published: Saturday, November 1, 2014, 13:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X