விரைவில் உங்கள் அபிமான ஸ்விஃப்ட், டிசையர் பேஸ்லிஃப்ட் மாடல்கள்!

By Saravana

அடுத்த மாத மத்தியில் ஸ்விஃப்ட் பேஸ்லிஃப்ட் மாடலையும், தீபாவளி பண்டிகையையொட்டி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் புத்தம் புதிய சியாஸ் மிட்சைஸ் செடான் காரும் மாருதியிடமிருந்து களத்தில் இறங்குகிறது.

இந்த மூன்று மாடல்கள் மூலம் போட்டியாளர்களின் நெருக்கடியிலிருந்து வெகு எளிதாக விற்பனையை தக்க வைக்க முடியும் என மாருதி நம்புகிறது. அதுசரி, இந்த புதிய மாடல்களில் இருக்கும் வசதிகளை பற்றி தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வம் ஏற்படுகிறதல்லவா? ஸ்லைடரில் இந்த கார்களில் இடம்பெற்றிருக்கும் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம்.

 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்

கடந்த ஆண்டு இங்கிலாந்து மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துவிட்ட இந்த மாடலில் எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது. டியூவல் டோன் இன்டிரியர், 6 ஏர்பேக்குகள், அனைத்து நவீன வசதிகள் கொண்ட மியூசிக் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஆகியவை புதிய அம்சங்களாக இருக்கும்.

 ஏஎம்டி மாடல்

ஏஎம்டி மாடல்

எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது. அதேவேளை, ஏஎம்டி டிரான்ஸ்மிஷனை இந்த காரில் கொடுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் கூறுகின்றனர். விலையில் பெரிய வித்தியாசம் இருக்காது.

மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட்

மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட்

தற்போது மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டத்தில் இருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி இந்த புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. குரோம் பட்டையுடன் முன்புற கிரில் அழகூட்டப்பட்டிருக்கும். எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், ஸ்மோக்டு ஹெட்லைட்டுகள், புதிய நீல நிற வண்ணம் ஆகியவற்றுடன் புதிய வீல்கவருடன் டிசையர் ஃபேஸ்லிஃப்ட் வருகிறது.

கூடுதல் வசதிகள்

கூடுதல் வசதிகள்

மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஐ-பாட் சப்போர்ட் செய்யும் இன் கார் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், எலக்ட்ரிக் சீட் அட்ஜெஸ்ட் வசதி, கிளைமேட் கன்ட்ரோல், கூடுதல் பொருட்கள் வைக்கும் வசதியுடையதாக மாற்றப்பட்ட பூட் ரூம் ஆகியவற்றை முக்கிய அம்சங்களாக கூறலாம். எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் இருக்காது.

 சியாஸ் செடான் கார்

சியாஸ் செடான் கார்

ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் சிட்டி ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியை கொடுக்கும் டிசைனிலும், வசதிகளுடனும் புதிய சியாஸ் செடான் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதுவும் பண்டிகை கால லிஸ்ட்டில்தான் உள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

95 பிஎஸ் பவரையும், 130 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 90 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. எஸ்எக்ஸ்4 காருக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த மூன்று மாடல்கள் மூலம் அடுத்த சில ஆண்டுகளுக்கு சந்தையில் தனது இடத்தை வலுவாக்கிக் கொள்ள முடியும் என மாருதி நம்புகிறது.

Most Read Articles
Story first published: Saturday, June 21, 2014, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X