மாருதி 800 காரின் விற்பனை நிறுத்தம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மார்க்கெட்டின் மிக வெற்றிகரமான மாடலாக திகழ்ந்த மாருதி 800 காரின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

பல மில்லியன் இந்திய வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இந்த காரின் உற்பத்தி கடந்த மாதம் 18ந் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டதாக, மாருதி நிறுவனத்தின் உயரதிகாரி சிவி.ராமன் தெரிவித்துள்ளார்.

Maruti 800 Car

உதிரிபாகங்கள் சப்ளை:

இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டாலும், விதிமுறைகளின்படி இந்த காருக்கான உதிரிபாகங்கள் அடுத்த 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல் சென்னை, ஹைதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னை காரணமாக விற்பனை நிறுத்தப்பட்டது.

பிஎஸ்-3 மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ள நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், புதிய கார் மாடல்கள், சந்தைப் போட்டி ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாருதி 800 காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

முதல்முதலாக விற்பனைக்கு வந்தபோது மாருதி- 800 கார் ரூ.50,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ரூ.2.35 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளது மாருதி-800.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X