ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை இறக்குவதில் போட்டா போட்டி... அடுத்து ஸ்விஃப்ட்

By Saravana

இந்திய சந்தை இதுவரை பார்த்திராத போட்டா போட்டி நிலை பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ளது. கூடுதல் அம்சங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்வதில் பல முன்னணி நிறுவனங்கள் வரிந்து கட்டி இறங்கியுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ, ஃபியட் புன்ட்டோ இவோ, ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துவிட்ட நிலையில், அடுத்ததாக மாருதி ஸ்விஃப்ட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வர இருக்கிறது.

Maruti Swift

பூமராங் வடிவிலான எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், சிறிய மாற்றம் செய்யப்பட்ட பானட், புதிய அலாய் வீல்கள், பம்பர் டிசைனில் மாற்றம் மற்றும் புதிய வண்ணங்களில் மாருதி ஸ்விஃப்ட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வர இருக்கிறது. தவிரவும், இன்டிரியரிலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

புதிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனையில் முன்னிலையில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான ஸ்விஃப்ட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளியையொட்டி இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஸ்விஃப்ட் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் தங்களது திட்டத்தை ஒருமுறை மறுபரிசீலனை செய்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
The Refreshed Swift model being launched by Maruti Suzuki will not receive a major makeover. The Japanese manufacturer plans to introduce minimal changes to the exterior, as they want to retain the originality of its hatchback.
Story first published: Wednesday, August 20, 2014, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X