2015 ஜனவரியில் மாருதி எஸ் கிராஸ் விற்பனைக்கு அறிமுகம்: ஆனா, விலை?!

By Saravana

அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய மாருதி எஸ் கிராஸ் கிராஸ்ஓவர் ரக கார் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடல் தற்போது பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. சமீபத்தில் ஆஸ்திரேலிய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய மாடல் முன்பதிவில் அசத்தி வருகிறது.


 கிராஸ்ஓவர் ரகம்

கிராஸ்ஓவர் ரகம்

எஸ்எக்ஸ்4 செடான் காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கிராஸ்ஓவர் ரக மாடல் இது. இதனை எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் என்று சுஸுகி அழைக்கிறது. பல்வேறு நாடுகளில் மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி பிராண்டில் விற்பனைக்கு சென்றுவிட்டது.

ஆக்சஸெரீஸ்

ஆக்சஸெரீஸ்

இந்த கிராஸ்ஓவர் காரில் எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், 16 இஞ்ச் அலாய் வீல்கள் போன்றவை சிறப்பு ஆக்சஸெரீஸ்களாக இருக்கும். தவிர, காரின் கீழ்பாகத்தை பாதுகாக்கும் ஸ்கிட் பிளேட் மற்றும் பக்கவாட்டுக்கான பாடி கிளாடிங் போன்ற பாதுகாப்பு கவசம் போன்ற ஆக்சஸெரீஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

ஆஸ்திரேலிய மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் எஸ் கிராஸ் கிராஸ்ஓவரில் இருக்கும் அதே வசதிகளுடன் இந்திய மண்ணிலும் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன. கிளைமேட் கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், பிரிமியம் லெதர் இருக்கைகள், உயர்ரக ஆடியோ சிஸ்டம், டியூவல் டோன் டேஷ்போர்டு போன்றவை இன்டிரியரின் சிறப்பம்சங்களாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்தியாவில் ஃபியட் நிறுவனத்தின் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக பீஜோ நிறுவனத்தின் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை.

 விலைதான்...

விலைதான்...

ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற காம்பெக்ட் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதனை ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் கொண்ட ஆரம்ப விலையில் இந்த புதிய கிராஸ்ஓவர் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், மஹிந்திரா எக்ஸ்யூவி500வுக்கு போட்டியாக இருக்கலாம். இருப்பினும், மாருதி நிறுவனம் விலை நிர்ணயிப்பதில் கில்லாடி. எனவே, பொறுத்திருந்து பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Maruti Suzuki had revealed quite a few interesting models at the 2014 Auto Expo in Delhi. Among them was their new crossover vehicle, which is based on the their SX4 sedan. The Japanese manufacturer calls their new crossover the SX4 S-Cross.
Story first published: Tuesday, May 13, 2014, 14:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X