ஹைபிரிட் ஸ்விஃப்ட் கார்களை மத்திய அரசுக்கு சப்ளை செய்யும் மாருதி? - ரகசியம் என்ன?

By Saravana

ஹைபிரிட் ஸ்விஃப்ட் கார்களை மத்திய அரசுக்கு மாருதி சப்ளை செய்ய உள்ளதாக பிரபல ஆட்டோமொபைல் இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்விஃப்ட் ரேஞ்ச் எக்ஸ்டென்டர் என்ற பெயரில் இந்த ஹைபிரிட் ஸ்விஃப்ட் கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முன்னோடி திட்டம் ஒன்றுக்காக இந்த ஹைபிரிட் ஸ்விஃப்ட் கார்களை மத்திய அரசுக்கு மாருதி சப்ளை செய்ய உள்ளது. ஆனால், எத்தனை ஹைபிரிட் ஸ்விஃப்ட் கார்கள் சப்ளை செய்யப்பட உள்ளன என்பது தெரியவில்லை.

மேலும், இந்த ஸ்விஃப்ட் ரேஞ்ச் எக்ஸ்டென்டர் கார்கள் இந்திய விதிமுறைகளுக்கு தக்கவாறு மாறுதல்கள் செய்யும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், அராய் சான்றுக்காக மாருதி காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் துவங்கப்பட இருக்கும் முன்னோடி திட்டத்திற்காக இந்த ஸ்விஃப்ட் கார்கள் வாங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இத்திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தெரிவிவிக்கப்படுகிறது. ஹைபிரிட் ஸ்விஃப்ட் காரில் இருக்கும் சில முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சுஸுகி ரேஞ்ச் எக்ஸ்டென்டர்

சுஸுகி ரேஞ்ச் எக்ஸ்டென்டர்

சுஸுகி ரேஞ்ச் எக்ஸ்டென்டர் காரில் 658சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 எச்பி ஆற்றலை அளிக்கும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது.

பேட்டரி

பேட்டரி

5 kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. 90 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகிவிடும் என்பது இதன் சிறப்பு.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒட்டுமொத்த கணக்கீடுகளின்படி, லிட்டர் அளவீட்டில் 48 கிமீ மைலேஜ் தருமாம். ஒருமுறை சார்ஜ் செய்து பேட்டரியில் மட்டும் இயங்கும்போது, 25.5 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் எடை

கூடுதல் எடை

சாதாரண ஸ்விஃப்ட் காரைவிட இந்த ஹைபிரிட் ஸ்விஃப்ட் கார் 130 கிலோ கூடுதல் எடைகொண்டது. மொத்தமாக 1,020 கிலோ எடை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Swift Range Extender is the name of the plug-in hybrid version of the popular hatchback. The Swift Range Extender was showcased at the 2014 Auto Expo last month. A new report on AutocarProfessional now claims that the government has placed orders for an undisclosed number of these hybrid Swift hatchbacks as part of a pilot project.
Story first published: Wednesday, March 26, 2014, 19:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X