பார்வையாளர்களை கவர்ந்த மாருதி எஸ்எக்ஸ்4 காரின் ஸ்போர்ட்ஸ் மாடல்!

By Saravana

இந்தியாவில் விற்பனையாகும் மிட்சைஸ் கார்களில் மாருதி எஸ்எக்ஸ்-4 சிறப்பான மாடல். ஆனால், போட்டியாளர்களுடன் டிசைன் மற்றும் வசதிகளில் போட்டியிட முடியவில்லை. ஃபியட் மற்றும் சுஸுகி நிறுவனங்களின் கூட்டணியில் உருவான இந்த கார் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் ஃபியட் செடிசி என்ற ஹேட்ச்பேக் மாடலாகவும், ஆசிய மார்க்கெட்டுகளில் சுஸுகி எஸ்எக்ஸ்-4 என்ற செடான் மாடாலாகவும் விற்பனையாகிறது.

2006ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த இந்த கார் இன்றும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது. 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்த மாடல் பங்கேற்றுள்ளது. இந்த நிலையில், எஸ்எக்ஸ்-4 காரின் சாதாரண மாடலை ஸ்போர்ட்ஸ் மாடல் போன்று உருமாற்றி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி காட்சிக்கு வைத்திருந்தது. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த அந்த எஸ்எக்ஸ்- 4 காரின் படங்கள், கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளன.

மாறுதல்கள்

மாறுதல்கள்

முன்பக்கத்தில் பம்பர், கிரில் ஆகியவற்றின் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் பனி விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஹெட்லைட்டில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்

கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்

ரியர் ஸ்பாய்லர், டிஃபியூசர்கள் போன்ற ஏரோடைனமிக்கை வழங்கும் ஆக்சஸெரீஸ்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மல்டி ஸ்போக் அலாய் வீல்களும் காருக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை அள்ளித் தருகிறது. மஞ்சள் நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கோடு மற்றும் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரும் இந்த நீல நிற காருக்கு கூடுதல் வசீகரத்தை தருகிறது.

இண்டிரியர்

இண்டிரியர்

காக்பிட்டில் நுழைந்தவுடன் ஸ்போர்ட்ஸ் பக்கெட் இருக்கைகள் மற்றும் சிறிய ஸ்டீயரிங் வீல் போன்றவை இது ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக காட்டுகிறது.

ஐபேட்

ஐபேட்

டேஷ்போர்டில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. கூடுதலாக ஐபேட் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போரட்ஸ் பெடல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

விற்பனைக்கு இல்லை

விற்பனைக்கு இல்லை

இந்த ஸ்போர்ட்ஸ் மாடலை தயாரிப்புக்கு கொண்டு செல்வதற்காக வடிவமைக்கவில்லை என்று மாருதி தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
The SX4 Sports is a work from Maruti showcasing what can be done with a regular road car. Don't expect this car to be manufactured anytime soon, as this is a display for Auto Expo 2014.
Story first published: Wednesday, February 12, 2014, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X